ஏராளமான வசதிகளுடன் டாடா விஸ்டாவின் புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டாடா விஸ்டா விஎக்ஸ் டெக் என்ற பெயரில் இந்த புதிய லிமிடேட் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடல் டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும்.
வசதிகள்
விஸ்டா விஎக்ஸ் டெக் வேரியண்ட்டில் 6.5 இஞ்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் பட்டன்கள் ஆகிய பல புதிய வசதிகளை கொண்டுள்ளது.
மல்டிமீடியா சிஸ்டம்
ரேடியோ, சிடி, டிவிடி இயக்கும் வசதி, எஸ்டி, யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் 5 மொபைல்போன்களுடன் தொடர்பு வசதி கொண்ட புளூ5 புளூடூத் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. ஆக்ஸ் போர்ட்டும் உள்ளது.
டிரைவர் இன்பர்ஃமேஷன் சிஸ்டம்
சென்ட்ரல் கன்சோலில் உள்ள எம்ஐடி டிரைவர் இன்பர்ஃமேஷன் சிஸ்டம் மூலம் எரிபொருள் சிக்கனம், சராசரி மைலேஜ் போன்ற ஏராளமான தகவல்களை பெற முடியும்.
வண்ணம்
புதிய புளூ சில் என்ற நிறத்திலும், டியூவல் டோன் இன்டிரியர் மற்றும் குரோம் பினிஷிங் வேலைப்பாடுகளுடன், புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் கொண்டதாக வந்துள்ளது.
சஸ்பென்ஷன்
இந்த விஸ்டா காரில் டூவோ ப்ளோட் சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டிருப்பதால் சிறப்பான கையாளுமை, சொகுசான பயணத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சின்
75 பிஎஸ் பவர் கொண்ட 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் மட்டும் டாப் வேரியண்ட்டாக இந்த புதிய மாடல் கிடைக்கும்.
விலை
ரூ.5.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய விஸ்டா விஎக்ஸ் டெக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய விஸ்டா
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விஸ்டாவின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஃபால்கன் 4 என்ற புதிய ஹேட்ச்பேக் காரை டாடா அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications