ரூ.2.36 லட்சத்தில் பவர் ஸ்டீயரிங்குடன் புதிய நானோ கார் அறிமுகம்

ரூ.2.36 லட்சம் விலையில் பவர் ஸ்டீயரிங் கொண்ட டாடா நானோ கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நானோ ட்விஸ்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய காரில் பவர் ஸ்டீயரிங்கை சேர்த்ததோடு, கூடுதல் மாற்றங்களை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். அதுபற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே வேரியண்ட்

ஒரே வேரியண்ட்

டாடா நானோ ட்விஸ்ட் XT என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்

எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்

இந்த காருக்கான எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்கை பிரபல ஆட்டோமொபைல் சப்ளையரான பாஷ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ZF நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. பவர் ஸ்டீயரிங் நானோ காரும் 4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவே இருக்கும்.

ஸ்டீயரிங் சிறப்பு

ஸ்டீயரிங் சிறப்பு

இந்த பவர் ஸ்டீயரிங் அமைப்பில் Active Return என்ற புதிய தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கிறது. இதன்படி, ஸ்டீயரிங் திருப்பிய பின்னர் தானாகவே இயல்புநிலைக்கு வந்துவிடும்.

 என்ன பயன்?

என்ன பயன்?

Activa Return தொழில்நுட்பத்தின் மூலம், கார் அதிவேகத்தில் செல்லும்போது அதிக நிலைத்தன்மையை தரும் என்பதால், ஓட்டுபவருக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் என்று டாடா குறிப்பிடுகிறது.

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

டாடா நானோ ட்விஸ்ட் கார் ஊதா நிறத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூடுதல் தகவல்களை பெறும் வசதி கொண்ட புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கூடுதல்?

எவ்வளவு கூடுதல்?

ரூ.2.36 லட்சம் விலையில் புதிய பவர் ஸ்டீயரிங் டாடா நானோ ட்விஸ்ட் வந்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள நானோ காரின் LX டாப் வேரியண்ட்டை விட நானோ ட்விஸ்ட் எக்ஸ்டி வேரியண்ட் ரூ.14,000 கூடுதலாக இருக்கும்.

 
Story first published: Monday, January 13, 2014, 13:34 [IST]
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+