டிரைவிங்கின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!!

By Saravana

கார் ஓட்டும்போது சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். இது நமக்கும், சாலையில் வரும் பிறருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யும்.

ஒரு சில சிறிய விஷயங்கள்தான் பெரும்பான்மையான கோர விபத்துக்களுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. எனவே, சில சிறிய விஷயங்களை எப்போதும் கவனத்தில் வைத்திருந்தால், பெரிய பாதிப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும்.

கார் கன்டிஷன்

கார் கன்டிஷன்

காரில் கிளம்புவதற்கு முன்னர் கார் கன்டிஷன் சரியாக இருக்கிறதா, அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். பேட்டரி, ஹெட்லைட், வைப்பர் , எரிபொருள் அளவு, டயரில் காற்றழுத்தம் ஆகியவற்றையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

 சீட் பெல்ட்

சீட் பெல்ட்

காரை ஓட்டும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய மறவாதீர். ஒரு சில வினாடி நேரத்துக்காக உங்களது உயிரை விலையாக கொடுக்கும் நிலை வரலாம்.

ஓட்டாதீர்கள்

ஓட்டாதீர்கள்

உடல்நிலை சரியாக இல்லாதபோது காரை ஓட்ட வேண்டாம். மன அமைதி இல்லாதபோது, உடல் சோர்வாக இருந்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு செல்வது நல்லது. மது அருந்தினால் கார் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். நீண்ட தூர பயணங்களின்போது கார் ஓட்டுபவர்கள் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம்.

கையில் எமன்

கையில் எமன்

இப்போது மொபைல்போன்தான் கார் ஓட்டிகளுக்கும், சாலையில் செல்பவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவதையும், குறுந்தகவல் டைப் செய்வது, அனுப்புவதையும் தவிர்த்துவிடுங்கள்.

ஓவர் ஸ்பீடு

ஓவர் ஸ்பீடு

அபாயகரமான வேகத்தில் காரை செலுத்துவதையும், ஓவர்டேக் செய்வதையும் தவிர்ப்பதும் அவசியம். இதனால், விபத்து மட்டுமின்றி தேவையில்லாத பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

 சிக்னல் கொடுங்கள்

சிக்னல் கொடுங்கள்

காரை திருப்பும்போதும், நிறுத்துவதற்கு முன்னரும் சிக்னல் கொடுக்க மறவாதீர்கள். அதற்காக, ஒரு கிலோமீட்டருக்கு முன்னரே இண்டிகேட்டர்களை போட்டுவிட்டு ஆமை வேகத்தில் செல்லாதீர். இது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

 இடைஞ்சல் தராதீர்

இடைஞ்சல் தராதீர்

பின்னால் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சல் தராத வகையில், சாலையின் இடதுபுறத்தில் காரை நிறுத்துவது அவசியம். பாதசாரிகள் மற்றும் அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுங்கள்.

மிக மிக கவனம்

மிக மிக கவனம்

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வணிகவளாகங்கள் இருக்கும் பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளிலும் மிதமான வேகத்தில் நிதானமாக செல்லுங்கள்.

ஓவர்டேக்

ஓவர்டேக்

பாலங்கள், வளைவுகள், மேம்பாலங்களில் செல்லும்போது ஓவர்டேக் செய்வதை அவசியம் தவிர்த்திடுங்கள். சாலையில் உள்ள எச்சரிக்கை பலகைகளில் இருக்கும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு அந்த பகுதிகளில் மிக கவனமாக செலுத்துவது அவசியம்.

தொடர்ந்து வா தொட்டுவிடாதே...

தொடர்ந்து வா தொட்டுவிடாதே...

முன்னால் செல்லும் வாகனத்துடன் மிக நெருக்கமாக செல்ல வேண்டாம்.

சுகமான டிரைவிங்

சுகமான டிரைவிங்

இந்த சிறிய விஷயங்களை எப்போதுமே கவனத்தில் கொள்வதுடன் கடைபிடித்து வருவோர்க்கு சகல சந்தோஷங்களும் டிரைவிங்கில் கிட்டும்.

Most Read Articles
 
Story first published: Friday, January 10, 2014, 16:00 [IST]
English summary
Some basic things to keep in mind while driving the car.
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X