40 லட்ச ரூபாய் மதிப்புடைய புதிய மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

Written By:

அலைபாயுதே படப்புகழ் நடிகர் மாதவன் தொடர்ந்து பல சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேடி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மாதவனுக்கு மோட்டார்சைக்கிள்கள் மீது கொள்ளை பிரியம். குறிப்பாக, நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற, டூரிங் ரக மோட்டார்சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

கடந்த ஆண்டு பிரம்மாண்டமான பிஎம்டபிள்யூ கே1600 ஜிடிஎல் மோட்டார்சைக்கிளை வாங்கியது குறித்து செய்தி வழங்கி இருந்தோம். இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ஒரு பிரம்மாண்ட டூரிங் ரக மோட்டார்சைக்கிளை வாங்கி இருக்கிறார்.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

ஆம், இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிளை நடிகர் மாதவன் வாங்கி இருக்கிறார். மேலும், தனது புதிய மோட்டார்சைக்கிளுடன் பயணத்தை துவங்கும் படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

"எனது தீபாவளி இந்த அலாதி சப்தத்துடன் துவங்குகிறது. எனது பிக் பாய் இதோ... மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்... பெருமைமிகு இந்தியன்," என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் நடிகர் மாதவன்.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

நடிகர் மாதவன் வாங்கி இருக்கும் இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் ரூ.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்ரோடு விலை ரூ.40 லட்சத்தை தாண்டும்.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

இந்த மோட்டார்சைக்கிளில் 138.9 என்எம் டார்க் திறனை வழங்க வல்ல 1,811சிசி தண்டர்ஸ்ட்ரோக் 111 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக மிக சக்திவாய்ந்த இந்த எஞ்சின் நீண்ட தூர பயணங்களுக்கு மிக சிறப்பான தோழனாக இருக்கும்.

Trending On DriveSpark Tamil:

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் விண்ட்ஷீல்டு கண்ணாடியை பட்டனை அழுத்தி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். குளிர்காலங்களில் ஓட்டும்போது, கைகள் பாதிக்கப்படாமல் இருக்க, கைப்பிடிகளை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் வசதியும் உள்ளது.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. உயர்தர மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் உள்ள ஸ்டோரேஜ் அறையில் 64.4 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதி உள்ளது. டேன் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

40 லட்ச ரூபாய்க்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதன்!

நடிகர் மாதவனிடம் இருக்கும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் மற்றும் சொகுசு கார்களின் விபரங்களை பார்க்க, ரசிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Trending On DriveSpark Tamil:

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor R Madhavan Gets Indian Roadmaster Motorcycle for this Diwali.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark