மாருதி சர்வீஸ் சென்டரில் நடக்கும் முறைகேடுகள் வீடியோ மூலம் அம்பலம்!

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் சர்வீஸ் விட்டபோது சர்வீஸ் சென்டரில் நடக்கும் விஷயங்கள் அம்பலமாகி உள்ளது. அதன் வீடியோ பதிவுகள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

முன்னணி கார் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் மோசடிகள் பெரும்பாலும் சிதம்பர ரகசியம் போலவே இருக்கும்.

ஏசி, வைஃபை வசதிகளுடன் மயக்கும் வசதிகளுடன் ஓய்விடங்களுக்குள் சற்று ஆசுவாசப்படுத்தும் வாடிக்கையாளர்கள் நேரத்தில், மாற்றியது, மாற்றாத விஷயங்களுக்கெல்லாம் சேர்த்து, ஒரு பில் வரும். வாடிக்கையாளருக்கு தலை கிறுகிறுத்து போகும்.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

ஆனால், சில சமயங்களில் அங்கு நடக்கும் முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துவிடும். அவ்வாறு, பெங்களூரில் உள்ள மாருதி நெக்ஸா டீலரில் நடந்த முறைகேடுகள் வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகி இருக்கின்றன.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

பெங்களூரில் உள்ள மாண்டோவி மோட்டார்ஸ் என்ற பெயரில் மாருதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் மிக பழமையான மாருதி டீலர் என்ற பெருமையும் உண்டு. ஆனால், அந்த பாரம்பரியம் மிக்க டீலர்ஷிப்பின் சர்வீஸ் சென்டரில் நடந்த முறைகேடுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

[Tamil] Triumph Street Scrambler Launched In India - DriveSpark
ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

பெங்களூரை சேர்ந்த மாருதி பலேனோ ஆர்எஸ் கார் உரிமையாளர் ஒருவர் அண்மையில் மேற்சொன்ன டீலரின் சர்வீஸ் மையத்திற்கு சென்றிருக்கிறார். காருக்கு இரண்டாவது இலவச சர்வீஸ் செய்வதற்காக அவர் தனது காரை அங்கு ஒப்படைத்துள்ளார்.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

காரை கொடுக்கும்போது, கார் நீண்ட நேரம் கழித்து ஸ்டார்ட் செய்யும்போது, பெட்ரோல் வாடை அதிகம் வருவதாக ஒரு குறையை சொல்லி சரிபார்த்து நிவர்த்தி செய்து தருமாறு கோரி காரை விட்டுள்ளார். பின்னர், சர்வீஸ் முடிந்து காரை டெலிவிரி பெற்றுவிட்டார்.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

காரை டெலிவிரி பெற்றவுடன், காரில் இருந்த டேஷ்கேம் வீடியோ பதிவுகளை ஆராய்ந்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

காரை சர்வீஸ் கொடுத்துவிட்டு வந்தவுடன், வெறும் தண்ணீர் ஊற்றி கழுவி எந்த பிரச்னை குறித்தும் ஆய்வு செய்யாமல் திரும்ப டெலிவிரி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

மேலும், கார் கழுவும்போது பணியாளர் ஒருவர் ஏசியை பயன்படுத்தியதும், உணவு அருந்தியதும் தெரிய வந்துள்ளது. காரில் டேஷ்கேம் இருந்தது முதலில் அங்குள்ள பணியாளர்களுக்கு தெரியவில்லை. ஆனால், டேஷ்கேம் இருந்தாலும், அதில் பதிவாகிறதா என்ற விஷயமும் அவர்களுக்கு புலப்படவில்லை.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

எனவே, அவர்களின் நடைமுறைகள், நடிவடிக்கைகள் அனைத்தும், தற்போது வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது. அந்த காரின் உரிமையாளர் டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் என்பதால், அந்த வீடியோவை அப்படியே எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

இதைவிட கொடுமை, அந்த காரை பொழுதுபோக்கும் இடம் போல இஷ்டத்திற்கு சில பணியாளர்கள் அமர்ந்து இருப்பதும், அதன் பின்னர் சர்வீஸ் சூப்பர்வைசர் வந்து வெளியேற சொல்வதும் கூட பதிவாகி உள்ளது.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

கார் கழுவியவுடன், கார் பானட்டை திறந்து பணியாளர் ஒருவர் பார்க்கிறார். அத்துடன், காரில் இருந்த அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாக, அதற்கான படிவத்தில் குறிப்பிட்டு, சர்வீஸை முடித்துவிட்டனர்.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

ஆயில் மற்றும் கூலண்ட் அளவு கூட அந்த சர்வீஸ் சென்டரில் ஆய்வு செய்யாததுதான் வாடிக்கையாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஹலோ மாருதி... இதுதான் உங்க நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸா... !?

இதுபோன்ற சம்பவங்களும், முறைகேடுகளும் பெரும்பாலான சர்வீஸ் சென்டர்களில் சகஜமாக நடக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இப்போதுதான் வெளியாகி உள்ளது. தினசரி இதுபோன்று எத்தனை வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை கணக்கிட்டால் நமக்கு தலை கிறுகிறுக்கிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் வாடிக்கையாளர் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்.

Most Read Articles
English summary
This Maruti Baleno Sent For Service, Gets Only A Car Wash.
Story first published: Tuesday, October 17, 2017, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X