மாருதி டிசையர் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

விற்பனையில் மாருதி டிசையர் கார் புதிய சாதனை படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த மே மாதம் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு 5 மாதங்களே ஆன நிலையில், விற்பனையில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

 விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புதிய மாருதி டிசையர்

வேறு எந்த ஒரு கார் மாடலும் இந்த சாதனைகளை முறியடிக்க முடியுமா என்பது போல் உள்ளது புதிய மாருதி டிசையர் காரின் சாதனைகள். ஆம், விற்பனையில் மாதத்திற்கு மாதம் இமாலய சாதனையை படைத்து வரும் மாருதி டிசையர் இப்போது மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது.

 விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புதிய மாருதி டிசையர்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 5 மாதங்களில் விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு எந்த ஒரு காரும் விற்பனையில் இந்தளவு குறுகிய காலத்தில் கடந்ததில்லை.

 விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புதிய மாருதி டிசையர்

மேலும், புதிய மாருதி டிசையர் காருக்கான காத்திருப்பு காலமும் 3 மாதங்கள் வரை நீடிக்கிறது. வேரியண்ட்டுக்கு தக்கவாறு இந்த காத்திருப்பு காலம் நிலவுகிறது. இது மாருதி நிறுவனத்துக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Recommended Video

[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
 விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புதிய மாருதி டிசையர்

மாருதி டிசையர் கார் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்ததற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அதில், முக்கியமானது, புத்தம் புதிய டிசைன். இதுவரை விற்பனையில் இருந்த மூன்று தலைமுறை மாருதி டிசையர் கார்களைவிட இந்த நான்காம் தலைமுறை மாடலின் டிசைன் முற்றிலும் மாற்றப்பட்டு இருக்கிறது.

 விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புதிய மாருதி டிசையர்

4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இப்போது முழுமையான செடான் கார் போல தோற்றத்தை பெற்றிருக்கிறது. மேலும், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர எல்இடி விளக்குகள், புதிய டெயில் லைட்டுகள், அலாய் சக்கரங்கள் என மாருதி டிசையர் போட்டியாளர்களைவிட சிறப்பான அம்சங்கள் பெற்ற மாடலாக மாறி இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

புதிய மாருதி டிசையர் காரின் இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புதிய மாருதி டிசையர்

மர அலங்கார வேலைப்பாடுகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ரியர் ஏசி வென்ட்டுகள் போன்றவை கூடுதல் மதிப்பு தரும் விஷயங்கள்.

இடவசதி

இடவசதி

முந்தைய மாருதி டிசையர் காரில் பெரிய குறையாக இருந்தது நெருக்கடியான பின் இருக்கையின் இடவசதி. அந்த குறையை போக்கும் விதத்தில், மாற்றங்கள் செய்து தற்போது கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மாருதி டிசையர் காரில் வாடிக்கையாளர்களிடம் பெரும் நம்பகத்தன்மையை பெற்ற 1.2 லிட்டர் சுஸுகியின் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், இந்த காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைப்பதும் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

மாருதி டிசையர் காரின் இமாலய விற்பனைக்கு மைலேஜும் முக்கிய காரணம். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.40 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, எரிபொருள் செலவீனமும் கையை கடிக்காத வகையில் இருக்கிறது.

பிராண்டு மதிப்பு!

பிராண்டு மதிப்பு!

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் மிகவும் நம்பகமான கார் மாடலாக மாருதி டிசையர் விளங்குகிறது. இதுவரை 14 லட்சம் டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. அத்துடன், மாருதியின் மிக நெருக்கமான சர்வீஸ் சென்டர்களின் கட்டமைப்பு சேவையும் இந்த காருக்கு வலு சேர்க்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தோதுவான விலைகளிலும், வேரியண்ட்டுகளிலும் நிரம்பிய வசதிகளுடன் கிடைக்கிறது.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
English summary
Maruti Suzuki Dzire Commands Waiting Period Of 3 Months — Here's Why You Should Wait
Story first published: Friday, October 20, 2017, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X