நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாகியிருக்கின்றன. கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி குதிரை பேரங்களை நடத்தி வருகின்றன.
வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளிலும் ஒரு சில கட்சிகள் மும்முரமாக இறங்கிவிட்டன. இந்த நிலையில், வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக, முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்காக, சொகுசு வசதிகள் அடங்கிய பிரச்சார வேன்கள் தயார் செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் டெம்போ டிராவலர் வேனை பிரச்சார வாகனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், தேசிய தலைவர்கள் சிலர் நடமாடும் இல்லம் எனப்படும் சொகுசு பஸ்களை ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ரன.
முக்கிய அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவதற்காக தயார் செய்யப்படும் பிரச்சார வேன்கள் மற்றும் பஸ்களில் இருக்கும் அம்சங்கள் மற்றும் அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.
முன்னணி நிறுவனங்கள்
டிசி டிசைன்ஸ், ஜேசிபில் பிசிபி கேரவன் உள்ளிட்ட நிறுவனங்கள் தேசிய அளவிலும், சென்னை மற்றும் கோவையை சேர்ந்த சில கஸ்டமைஸ் நிறுவனங்களும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பிரச்சார வேன் மற்றும் கேரவன் தயாரிப்பில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
டெம்போ டிராவலர்
தேர்தல் பிரச்சாரங்களுக்கு டெம்போ டிராவலர் வேன்தான் பெரும்பாலும் பிரச்சார வாகனமாக பல தலைவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பிரச்சார வேன்கள்
பல நாட்கள் ஓய்வு இல்லாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் தலைவர்களுக்கு அலுப்பு தெரியாத வகையில் இதுபோன்ற பிரச்சார வேன்களில் ஏராளமான விசேஷ வசதிகள் செய்யப்படுகின்றன.
வசதிகள்
சாய்மான இருக்கைகள், விளக்குகள், மேடை, திறந்து மூடும் வசதி கொண்ட கூரை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. தவிர, சிறிய குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோ ஓவன், பொழுதுபோக்கு சாதனங்களும் இடம்பெறுகின்றன. சில வேன்களில் கழிவறை வசதியும் உண்டு.
இதர வசதிகள்
சில அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் பிரச்சார வாகனத்தில் படுக்கை வசதி, டிவி, வைஃபை இன்டர்நெட் தொடர்பு என ஒரு வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடனும் தயார்படுத்திக் கொடுப்பதாக முன்னணி கஸ்டமைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேமரா
கண்காணிப்பு கேமரா மற்றும் தலைவர்கள் பயணத்தை 10 நாட்கள் வரை பதிவு செய்யும் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா மற்றும் மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட சாதனங்களும் இதுபோன்ற வாகனங்களில் பொருத்தப்படுகின்றன.
புல்லட் புரூப் வசதி
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவர்களுக்காக வடிவமைக்கப்படும் பிரச்சார வாகனங்களின் கண்ணாடிகள் புல்லட் புரூப் கொண்டதாக வடிவமைத்து தரப்படுகிறது. மேலும், கண்ணி வெடி தாக்குதலில் இருந்து சேதமடையாத அடிப்பாகம் கொண்டதாகவும் வடிவமைத்து கொடுக்கப்படுகிறது. மேலும், பக்கவாட்டில் பாதுகாவலர்கள் நின்று செல்லும் வகையிலான வசதியும் இருக்கும்.
குழுவாக செல்வதற்கு வசதி
சில சமயங்களில் அமைச்சர்கள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு ஏதுவாக பிரத்யேக கஸ்டமைஸ் மாடல்களை தயாரித்து கொடுப்பதாக பிசிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலக்கு
ஜேசிபில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரிஷி அகர்வால் கூறுகையில்," இந்த லோக்சபா தேர்தலின்போது 50 பிரச்சார வேன்களை விற்பனை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
விலை
ரூ.25 லட்சம் முதல் ரூ.4.5 கோடி வரையிலான விலையில் இதுபோன்ற பிரச்சார வாகனங்கள் தயாரித்து கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications