பைக் பிரியர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், இனிதே நடந்து முடிந்துள்ளது இந்திய பைக் வீக் திருவிழா. இந்தியாவின் மிகப்பெரிய பைக் வீக் திருவிழாவாக தற்போது கொண்டாடப்படும் இந்த பைக் வீக் திருவிழா அடுத்த முறை இடமாற்றம் செய்யப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பைக் வீக் திருவிழாவை ஏற்பாடு செய்து நடத்தும் 70 ஈவன்ட் மீடியா குழுமத்தின் தலைவர் மார்ட்டின் டா கோஸ்டா டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எடிட்டர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதை ஸ்லைடரில் காணலாம்.
பெங்களூருக்கு வருகிறதா?
கடந்த இரு முறையும் கோவாவில் நடத்தப்பட்டுள்ளதால், பைக் பிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த முறை பெங்களூர் அல்லது மும்பையில் நடத்த திட்டமிட்டோம்.
இரவில் பைக் பந்தயம்
மேலும், பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானம் அல்லது ஜக்கூரில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. மேலும், ஜக்கூரில் உள்ள விமான தளத்தில் இரவில் பைக் பந்தயத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டியலில் ஜெய்ப்பூர்
இந்த பட்டியலில் ஜெய்ப்பூரும் உள்ளது. எனவே, அடுத்த முறை ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைக்கு அருகில் நடத்துவதற்கான திட்டங்களையும் பரிசீலித்து வருகிறோம்.
ஸ்பான்சர்கள்
இந்த இரண்டு நாட்கள் பைக் வீக் திருவிழாவிற்கு ரூ.5 கோடி வரை செலவிடப்பட்டது. இதில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 25 சதவீத நிதி பங்களிப்பை வழங்கியது.
தயாரிப்பாளர்கள்
இந்த பைக் வீக் திருவிழாவில் முக்கிய ஸ்பான்சராக ஹார்லி டேவிட்சன் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு டிவிஎஸ் நிறுவனமும் பங்கேற்றது. பஜாஜ் போன்ற பல நிறுவனங்களின் வருகையை எதிர்பார்க்கிறோம். பல நிறுவனங்கள் இணையும்போது நிச்சயம் இது மாபெரும் திருவிழாவாக எதிர்காலத்தில் மாறும்.
அறிமுகம்
இதர ஆட்டோ எக்ஸ்போ போன்றே புதிய மாடல்களின் அறிமுகத்தை நடத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
போட்டியா?
இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு நேர் போட்டியாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோணியின் நிதி பங்களிப்பில் பைக் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா என்ற புதிய பைக் திருவிழா நடக்க இருப்பது பற்றி கேட்டதற்கு," இந்த விஷயத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பைக் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்றார்.
மேலும், எங்களிடம் அனுபவம் இருக்கிறது, அவர்களிடம் பணம் இருக்கிறது என்று சூசகமாக கூறினார்.


Click it and Unblock the Notifications