ஒரே எஞ்சின்.. ஓஹோன்னு பிசினஸ்... ஹோண்டாவின் டீசல் அஸ்திரம்!

By Saravana

ஒரே ஒரு டீசல் எஞ்சின் ஹோண்டாவின் வர்த்தகத்தை உச்சாணிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. டீசலை தீண்டத்தகாத எரிபொருளாக கருதி பெட்ரோல் கார் தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது ஹோண்டா. ஆனால், இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் விலைக்கும், டீசல் விலைக்கும் முடிச்சு போட முடியாமல் தவித்த ஹோண்டா இறுதியில் டீசல் மாடலுக்கு தாவியது.

இந்தியாவில் பெட்ரோல் மாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு தடுமாறி வந்த ஹோண்டா முதல்முறையாக புதிய டீசல் எஞ்சினுடன் அமேஸ் காரை அறிமுகம் செய்தது. அமேஸ் வந்தபின் ஹோண்டாவின் மார்க்கெட் பல புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

பவர் + மைலேஜ்

பவர் + மைலேஜ்

கடந்த ஆண்டு புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை ஹோண்டா அறிமுகம் செய்தது. ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் சிவிக், சிவிக் டூரர் மற்றும் சிஆர்வி எஸ்யூவிகளில் இந்த புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மார்க்கெட்டில் 1.5 லிட்டர் எஞ்சின் வரையில் வரிச்சலுகை வட்டத்தில் வருவதால், 1.6 லிட்டர் எஞ்சினை 1.5 லிட்டர் எஞ்சினாக மாற்றங்களை செய்து அமேஸ் காரில் பொருத்தியது ஹோண்டா. ஹோண்டா அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரை அளிக்கும் என்பதோடு, லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜையும் தரும் என்றதும் வாடிக்கையாளர்கள ஈர்க்க காரணமாகியது.

 புதிய ஹோண்டா சிட்டி

புதிய ஹோண்டா சிட்டி

அமேஸ் காரை அடுத்து இரண்டாவதாக புதிய ஹோண்டா சிட்டியில் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. சிறப்பு என்னவெனில், அமேஸ் காரைவிட அதிக மைலேஜ் தரும் சிட்டி காரின் டீசல் எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், சிட்டி டீசல் கார் மிட்சைஸ் மார்க்கெட்டில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பெட்ரோல் சிட்டி காரைவிட டீசல் மாடல் ஒரு லட்ச ரூபாய் வரை அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

புதிய ஜாஸ் கார்

புதிய ஜாஸ் கார்

புதிய தலைமுறை ஜாஸ் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரிலும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட உள்ளது. டிசைனில் படு சூப்பராக தெரியும் புதிய ஜாஸ் காரின் டீசல் மாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மொபிலியோ எம்பிவி

மொபிலியோ எம்பிவி

இந்தோனேஷிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மொபிலியோ எம்பிவி கார் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்திய மார்க்கெட்டில் வர இருக்கிறது. மாருதி எர்டிகா போட்டியாளராக கருதப்படும் இந்த காரிலும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

வெஸல் எஸ்யூவி

வெஸல் எஸ்யூவி

ஹோண்டா வெஸல் காம்பெக்ட் எஸ்யூவி ஜப்பானில் இன்று விற்பனைக்கு வந்துவிட்டது. அடுத்ததாக இந்திய மார்க்கெட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த எஸ்யூவியிலும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படும்.

 ஒஹோன்னு பிசினஸ்

ஒஹோன்னு பிசினஸ்

அமேஸ் காரில் வந்த அந்த 1.5 லிட்டர் எஞ்சின் ஹோண்டாவின் வர்த்தகத்தை புதிய கோணத்தில் கொண்டு செல்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல்களும் விற்பனைக்கு வரும்போது நிச்சயமாக ஹோண்டாவின் விற்பனை புதிய வளர்ச்சி உச்சங்களை தொடும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
Japanese motorcycle and car manufacturer shied away from ‘dirty oil burners’ for years. Honda culture, you see, was all about petrol engines. Built on the bedrock of motorsport, high-revving petrol engines and driving pleasure, diesels were an anathema.
Story first published: Friday, December 20, 2013, 18:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X