பார்முலா-1 தொழில்நுட்பத்துடன் கலக்கும் ரெனோ ட்விஸி!

ஒரு சிறிய எலக்ட்ரிக் காரில் பார்முலா-1 கார்களின் தொழில்நுட்பத்தை புகுத்த முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளது ரெனோ. ஆம், தனது ட்விஸி எலக்ட்ரிக் சிட்டி காரில் பார்முலா-1 தொழில்நுட்பங்களை கையாண்டுள்ளது ரெனோ. இலகு எடை, கூடுதல் பாடி கிட், பிரத்யேக டயர்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றில் பார்முலா-1 கார்களின் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், ரெனோ ட்விஸியின் தோற்றம் மிகவும் வசீகரமாக இருக்கிறது. ரெனோவின் மெகானே ஆர்எஸ்265 லிமிடேட் எடிசன் ஹேட்ச்பேக் காரை விட இந்த மினி கார் பவர்ஃபுல்லாக மாறியிருக்கிறது. ட்விஸி ஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த பார்முலா-1 ஸ்டைல் மினி காரை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

சாதாரண ட்விஸி

சாதாரண ட்விஸி

படத்தில் இருப்பது சாதாரண ட்விஸி கார். போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் எளிதாக செல்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட மினி எலக்ட்ரிக் கார். இதில் 17 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 13கேவி எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

 ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1

ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1

பார்முலா-1 பந்தயங்களில் முன்னிலை வகித்து வரும் ரெனோவின் ஸ்போர்ட் எஃப்-1 மற்றும் ரெனோ ஸ்போர்ட் ஆகியவை இந்த எலக்ட்ரிக் கார் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

 பவர்

பவர்

இந்த காரில் 97 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 72கேவி எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கிமீ வேகம்.

பவர் ஒப்பீடு

பவர் ஒப்பீடு

சாதாரண ட்விஸியை விட இந்த ட்விஸி ஸ்போர்ட் காரின் எலக்ட்ரிக் மோட்டார் 80 எச்பி கூடுதல் பவர் கொண்டது.

சிறப்பு தொழில்நுட்பம்

சிறப்பு தொழில்நுட்பம்

ரெனோவின் பார்முலா-1 கார்கள் போன்றே இந்த காரிலும் ஆற்றலை மீட்டு சேமிக்கும் எஞ்சினுக்கு உடனடி பிக்கப்பை கொடுக்கும் தொழில்நுட்பம் உள்ளது.

உந்துசக்தி

உந்துசக்தி

0-100 கிமீ வேகத்தை இந்த எலக்ட்ரிக் கார் வெறும் 14 வினாடிகளில் தொட்டுவிடும்.

 பிரத்யேக டயர்

பிரத்யேக டயர்

இந்த காரை பார்முலா-1 காரை போன்று ஓட்டவும், கையாளவும் முடியும். ஏனெனில், ரினால்ட் 2.0 ரேஸ் காரில் பயன்படுத்தப்படும் பிரத்யேக டயர் தொழில்நுட்பம் கொண்ட டயர்கள்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

 பார்முலா-1 ஸ்டைல்

பார்முலா-1 ஸ்டைல்

பார்முலா-1 கார்களின் ஸ்டைல் கொண்ட ஸ்டீயரிங் வீல்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கூடுதல் வசீகரம்

கூடுதல் வசீகரம்

பவர், டயர் தவிர பார்முலா-1 கார்களை ஒத்த ரியர் வியூ மிரர், எல்இடி விளக்குகள், முன் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர்கள் மற்றும் சைடு ஸ்கர்ட் ஆகியவை பார்முலா-1 ஸ்டைல் காராக ட்விஸி ஸ்போர்ட்டை மாற்றியிருக்கிறது.

 உற்பத்தி கிடையாது

உற்பத்தி கிடையாது

இந்த காரை உற்பத்தி செய்யும் திட்டம் ரெனோவிடம் இல்லையாம்.

Most Read Articles
English summary
Did you ever have the crazy idea of adding Formula 1 technology to your small electric city car? No? Its pretty straightforward in theory. Take a light weight mini car, fit on oversized body kit and tyres, tweak the powertrain and you have a mean machine that will put a regular sports car to shame.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X