கார் விற்பனையில் ஏற்றம்: தயாரிப்பாளர்கள் உற்சாகம்

By Saravana

இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளால் மந்த நிலையில் இருந்து வந்த கார் மார்க்கெட், வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடந்த ஜூலையிலும் கார் விற்பனையில் 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இது கார் நிறுவனங்களுக்கு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. வழக்கம்போல் மாருதி கார் நிறுவனம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மாதம் மாருதி கார் விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவும் கார் மார்க்கெட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 83,299 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 1,01,380 கார்களை விற்பனை செய்தது.

Toyota Innova

இதேபபோன்று, ஹூண்டாய் நிறுவனமும் 13 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது இடத்திலிருக்கும் மஹிந்திராவுக்கு கடந்த மாதம் சோதனைதான். அதேநேரத்தில், 4வது இடத்தில் இருக்கும் ஹோண்டா படுவேகமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதேநிலை நீடித்தால், நடப்பாண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளர் அந்தஸ்தை பிடித்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த கார் மார்க்கெட்டில் ஏற்பட்டிருக்கும் விற்பனை வளர்ச்சி பல முன்னணி கார் தயாரிப்பாளர்களுக்கு புதிய டானிக் கொடுத்துள்ளது. எனவே, வரும் பண்டிகை காலத்தில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
Passenger car sales rose for the the third month last July. This is a good indicator of the growing economy after it recorded less than 5 percent growth for the past two years.
Story first published: Wednesday, August 6, 2014, 8:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X