அட்டகாசமான புதிய ஹோண்டா சிவிக் டைப்- ஆர் கான்செப்ட் தரிசனம் தர தயார்!

மிக அசத்தலான புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் டைப்- ஆர் கான்செப்ட் கார் மாடல் பாரிஸ் மோட்டார்ஸ் ஷோவில் மீண்டும் ஒரு பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த கான்செப்ட் மாடலின் டீசரை ஹோண்டா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் கான்செப்ட் மாடலாக இருந்த நிலையில், பாரிஸ் மோட்டார் ஷோவிலும் இந்த அட்டகாசமான ஹேட்ச்பேக் கார் கான்செப்ட் மாடலாக தரிசனம் தர வருகிறது.


 பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

முந்தைய சிவிக் டைப்- ஆர் மாடல்களைவிட இந்த புதிய சிவிக் டைப்-ஆர் மாடல் மிகுந்த சக்திவாய்ந்ததாக இருக்கும். ஒப்பிட முடியாத பெர்ஃபார்மென்சையும் வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா சிவிக் டைப்- ஆர் கான்செப்ட் மாடலில் 280 எச்பி பவரை அளிக்கும் ஐ- விடெக் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஓவர்சைஸ் வீல்கள், அல்ட்ரா லோ ப்ரொபைல் டயரர்கள், ஏரோடைனமிக் கிட், குவாட் எக்ஸ்சாஸ்ட் டிப், பிரத்யேக பாடி டீகெல்கள் போன்றவை இந்த காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

இங்கிலாந்தின் சுவின்டன் நகரில் உள்ள ஹோண்டா ஆலையில் புதிய தலைமுறை சிவிக் டைப்- ஆர் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய காரை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Japanese car maker Honda will display its Civic Type-R Concept at the Paris Motor Show, this time in a vivid shade of blue.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X