தீபாவளி பரிசாக புதிய ஐ30 காரை களமிறக்கும் ஹூண்டாய்!

வரும் தீபாவளி பண்டிகை காலத்தில், புதிய ஐ30 பிரிமியம் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதனை ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா உறுதிப்படுத்தியிருக்கிறார். தற்போது இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் விற்பனை செய்து வரும் ஐ20 ஹேட்ச்பேக் காரை விட அதிக விலை கொண்ட மாடலாக இது நிலைநிறுத்தப்படும்.


புதிய பெயர்

புதிய பெயர்

ஐரோப்பிய மார்க்கெட்டில் ஐ30 என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த காரை இந்தியாவில் புதிய பெயரில் வெளியிட ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

வசதிகள்

வசதிகள்

தாராள இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் மாடலாகவும், மிட்சைஸ் செடான் காருக்கு இணையான வசதிகளுடன் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

 இதுதான் திட்டம்

இதுதான் திட்டம்

பல நாடுகளில் ஐ10 காருக்கு மாற்றாக கிராண்ட் ஐ10 விற்பனைக்கு சென்றது. ஆனால், இந்தியாவில் இரண்டு மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதே பாணியில் புதிய ஐ20 காரையும், புதிய ஐ30 காரையும் விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்ஸ்

எஞ்சின் ஆப்ஷன்ஸ்

ஐரோப்பிய மார்க்கெட்டில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டுவிதமான பவர் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் குறைந்த திறன் கொண்டதாக விற்பனை செய்யப்படும் 100 எச்பி ஆற்றல் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, டிசைனிலும் சிறிய மாற்றங்களுடன் புதிய ஐ30 கார் இந்தியா வரும் என்று கருதலாம்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய ஜாஸ் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai Motor India Senior Vice-President, Rakesh Srivastava has confirmed that the company will launch a new hatchback placed above the i20.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X