காஸ்ட்லி காரில் மட்டுமா... உங்கள் காரிலும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதி பெறலாம்

By Saravana

அனைத்து கார்களிலும் எளிதாக ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியை தரும் புதிய சாதனத்தை நவ்டி அறிமுகம் செய்துள்ளது. விலையுயர்ந்த கார்களில் மட்டுமே முன்புற வைன்ட்ஸ்கிரீனில் தகவல்களை பெறுவதற்கான ஹெட் அப் டிஸ்ப்ளே வசதி இருக்க முடியும் என்ற விதியை இந்த புதிய சாதனம் தகர்த்துள்ளது.

கார்மின் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதுபோன்ற ஹெட் அப் டிஸ்ப்ளே சாதனங்களை அறிமுகம் செய்திருந்தாலும், அவற்றைவிட கூடுதல் வசதியையும், எளிதாக இயக்கும் அம்சங்களை இந்த புதிய நவ்டி ஹெட் அப் டிஸ்ப்ளே சாதனம் கொண்டுள்ளது. இதன்மூலம், கார் ஓட்டும்போது கவனம் சிதறாத வகையில் அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

நவ்டியின் கூடுதல் வசதிகளை ஸ்லைடரில் காணலாம்.

கார் மாடல்

கார் மாடல்

1996ம் ஆண்டுக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட ஆன்போர்டு டயாக்னஸிஸ்- II போர்ட் வசதி கொண்ட அனைத்து கார்களிலும் இந்த ஹெட் அப் டிஸ்ப்ளேயை வாங்கிப் பொருத்திக் கொள்ள முடியும். காரின் டேஷ்போர்டின் மேலே இந்த சாதனை பொருத்திக் கொண்டால் பல முக்கியத் தகவல்களையும், போன் அழைப்புகள், மியூசிக் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற வசதிகளை ஹெட் அப் டிஸ்ப்ளே கருவி மூலம் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இந்த புதிய சாதனத்தை ஐஓஎஸ்-7 இயங்குதளம் கொண்ட ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் ஆன்ட்ராய்டு 4.3+ இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

வசதிகள்

வசதிகள்

காரின் ஆன்போர்டு கம்ப்யூட்டரிலிருந்து வேகம், எரிபொருள் அளவு, டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற தகவல்களை இந்த சாதனத்தின் மூலம் பெற முடியும். இதேபோன்று, ஸ்மார்ட்போனிலிருந்து அழைப்புகளை பெறுவது, செய்வது, எஸ்எம்எஸ், நேவிகேஷன், மியூசிக் போன்ற வசதிகளை இந்த சாதனம் மூலம் பெற முடியும்.

சிறப்பு வசதி

சிறப்பு வசதி

இந்த சாதனத்தை டச்லெஸ் என்ற புதிய வசதி மூலம் இயக்க முடியும். அதாவது, தொடுதிரையை தொட்டு இயக்கவேண்டியதில்லை. குறிப்பிட்ட சைகை மூலம் இந்த சாதனத்தை இயக்க முடியும் என்பது மிக முக்கிய வசதி.

 விலை

விலை

தற்போது புரோட்டோடைப் நிலையிலிருக்கும் இந்த சாதனம் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு கிடைக்கும். தற்போது, 499 அமெரிக்க டாலர் விலையில் இந்த புதிய சாதனத்துக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும், முதல் 30 நாட்களுக்கு 299 டாலர் விலையில் இந்த புதிய சாதனத்தை சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என நவ்டி தெரிவித்துள்ளது.

வீடியோ

நவ்டி ஹெட் அப் டிஸ்ப்ளே சாதனத்தின் வசதிகளை விளக்கும் வீடியோ.

Most Read Articles
English summary
Navdy's transparent Head-Up Display (HUD) projects information as if it's floating six feet in front of you. In the car you already have.
Story first published: Thursday, August 7, 2014, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X