புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் படங்கள், விபரங்கள் கசிந்தது!

By Saravana

அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் படங்கள், விபரங்கள் வெளியாகியுள்ளன. மாருதி ஆல்ட்டோ 800 காரில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் டிசைன் மாற்றங்களை செய்து 1.0 லிட்டர் எஞ்சினுடன் புதிய ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு வருகிறது.

மேலும், புதிய ஆல்ட்டோ கே10 கார் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகைகளில் கிடைக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

புதிய ஆல்ட்டோ கே10 கார் எல்எக்ஸ், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ(ஓ) ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதில், இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 எல்எக்ஸ்(பேஸ் வேரியண்ட்)

எல்எக்ஸ்(பேஸ் வேரியண்ட்)

எல்எக்ஸ் பேஸ் வேரியண்ட்டில் வெப்பப்படுத்தும் வசதியுடன் கூடிய மேனுவல் ஏர்கண்டிஷனர் இருக்கிறது. இருக்கையுடன் இணைந்த ஹெட்ரெஸ்ட்டுகள், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி கொண்டிருக்கும். சீட்பெல்ட் மட்டுமே இந்த வேரியண்ட்டில் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு வசதியாக கூறலாம். எல்எக்ஸ் பேஸ் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங் இருக்காது.

எல்எக்ஸ்ஐ (மிட் வேரியண்ட்)

எல்எக்ஸ்ஐ (மிட் வேரியண்ட்)

எல்எக்ஸ் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக பவர் ஸ்டீயரிங், டெயில்கேட் ஓபனர், பின்புற கதவுகளுக்கு சைல்டுலாக் வசதி, டிரைவர் பக்க ரியர் வியூ கண்ணாடியை உள்ளிருந்து அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் இருக்கும்.

 விஎக்ஸ்ஐ (டாப் வேரியண்ட்)

விஎக்ஸ்ஐ (டாப் வேரியண்ட்)

விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சிடி பிளேயர், ரேடியோ வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். இது யுஎஸ்பி போர்ட் வசதியுடன் இந்த ஆடியோ சிஸ்டத்துடன் 2 ஸ்பீக்கர்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும். சென்ட்ரல் லாக்கிங், முன்புறத்தில் பவர் விண்டோஸ், ஹெட்லைட் எச்சரிக்கை அலாரம், டாக்கோமீட்டர், டிஜிட்டல் கடிகாரம், பார்சல் ட்ரே, வீல் கவர்கள் போன்றவை இந்த வேரியண்ட்டின் நிரந்தர சிறப்பம்சங்களாக இருக்கும்.

 விஎக்ஸ்ஐ(ஆப்ஷனல்)

விஎக்ஸ்ஐ(ஆப்ஷனல்)

விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் டிரைவர் ஏர்பேக், முன்புற பனி விளக்குகள் மற்றும் கீலெஸ் என்ட்ரி வசதிகள் இருக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 32.26 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேனுவல் டிரான்ஸ்மிஷன்

மேனுவல் டிரான்ஸ்மிஷன்

பெட்ரோல், சிஎன்ஜி மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

செலிரியோவுக்கு அடுத்ததாக ஆல்ட்டோ கே10 கார் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இது மிகவும் குறைவான விலை ஆட்டோமேட்டிக் மாடலாக இருக்கும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki India will launch a new version of its Alto K10 next month. The new Maruti Alto K10 will be available in petrol and CNG fuel options. It gets four trims – LX, LXi, VXi and VXi(O). Take a look at the variant wise details.
Story first published: Monday, October 27, 2014, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X