ஆன்ரோடுக்கு வந்த டொயோட்டாவின் ஐரோடு

By Saravana

கடந்த ஆண்டு நடந்த டோக்கியோ மோட்டார் ஷோவில் ஐ-ரோடு என்ற மூன்று சக்கர தனிநபர் பயன்பாட்டு வாகனம் ஒன்றை டொயோட்டா அறிமுகம் செய்தது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஐ ரோடு கான்செப்ட் மாடல் தற்போது உற்பத்தி நிலையை எட்டியிருக்கிறது.

அவ்வாறு உற்பத்தி நிலைக்கான அம்சங்கள் கொண்ட 10 ஐரோடு வாகனங்களை டொயோட்டா நிறுவனம் சாதாரண சாலைகளில் வைத்து சோதனை நடத்துகிறது. இந்த சோதனைகள் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளன.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் 2 பேர் பயணிக்க முடியும். இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளன.

செல்ஃப் பேலன்ஸ்

செல்ஃப் பேலன்ஸ்

முன்புறத்தில் 2 சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரத்தையும் கொண்டிருக்கும் இந்த புதிய வாகனம் செல்ஃப் பேலன்சிங் எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டது. இதனால், வளைவுகளில் திரும்பும்போது கூட கவிழாத வகையில் சரிசெய்து கொள்ளும்.

வடிவம்

வடிவம்

2.4 மீட்டர் நீளம் கொண்ட இந்த பேட்டரி வாகனம் 300 கிலோ எடை கொண்டது. இருசக்கர வாகனத்திற்கு மாற்று வாகனமாக இதனை பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மின்மோட்டார்

மின்மோட்டார்

லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும் 2 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 48 கிமீ தூரம் செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லத்தக்கதாக இருக்கும்.

Most Read Articles
English summary

 Toyota had showcased a three wheeler concept at previous years Tokyo Motor Show. They have prepared a production model and will begin testing the electric vehicle in urban conditions.
Story first published: Tuesday, March 25, 2014, 16:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X