புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் அறிமுகம்... இப்போது ஏற்றுமதிக்கு மட்டும்!!

By Saravana

இதுவரை ஆர்இ60 என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த பஜாஜ் நிறுவனத்தின் புதிய நான்கு சக்கர வாகனம் தற்போது க்யூட் என்ற பெயரில் டெல்லியில் நடந்த விழாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றான சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நான்கு சக்கர வாகனமாக இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவிக்கிறது. குவாட்ரிசைக்கிள் எனப்படும் சிறிய வகை நான்கு சக்கர செக்மென்ட்டில் இந்தியாவின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்றுமதி மட்டும்

ஏற்றுமதி மட்டும்

இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அனுமதி கிடைக்காததையடுத்து, முதலில் வெளிநாடுகளில் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. மொத்தம் 16 நாடுகளில் இந்த புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

அனுமதி

அனுமதி

புதிய பஜாஜ் க்யூட் வாகனத்திற்கு ஐரோப்பிய குவாட்ரிசைக்கிள் விதிகளுக்குட்பட்ட அம்சங்களை கொண்டிருப்பதாக, நெதர்லாந்து வாகன போக்குவரத்து ஆணையம் சான்று வழங்கியிருக்கிறது. இதன்மூலம், அங்கு இந்த புதிய குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் மூன்று ஸ்பார்க் பிளக்குகள் கொண்ட 217சிசி டிடிஎஸ்-ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பஜாஜ் க்யூட் லிட்டர் பெட்ரோலுக்கு 36 கிமீ மைலேஜ் தரும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவிக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 70 கிமீ வேகம் வரை செல்லும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

பஜாஜ் க்யூட் 2,000 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.1.32 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறுது.

Most Read Articles
English summary
The RE60 has finally been revealed and has been christened as ‘Qute'. Unfortunately this quadricycle will not be sold in Indian market currently and is only for export markets.
Story first published: Friday, September 25, 2015, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X