இந்திய சாலைகளில் புழுதியை கிளப்ப வரும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி!

By Saravana

கடந்த ஆண்டில் 10,000க்கும் அதிகமான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உற்சாகமடைந்திருக்கிறது. இந்த விற்பனை வேகத்தை தக்க வைக்கும் விதத்தில், இந்த ஆண்டு 15 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்த 15 புதிய கார் மாடல்களில் அந்த நிறுவனத்தின் சமீபத்திய மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி காரும் ஒன்று. மெர்சிடிஸ் - ஏஎம்ஜி கூட்டணியில் நேரடியாக தயாரிக்கப்பட்ட இந்த அதிசக்திவாய்ந்த கார் மாடல் இந்தியா வர இருப்பது பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகளுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சியை தரக்கூடிய செய்தியாகும்.

இந்த புதிய கார் மாடல் இருவிதமான பவர் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் கொண்டதாக கிடைக்கும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி என்ற பேஸ் மாடல் 462 எச்பி பவரையும், 600என்எம் டார்க்கையும் வழங்கும்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் என்ற மற்றொரு உயர்வகை மாடல் 510 எச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இரண்டு மாடல்களும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பு, அடாப்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைபீம் அசி்ஸ்ட், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் டேம்பர்கள் மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக கிடைக்கும்.

ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி மாடல் ரூ.2.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இருக்கும் என்பது கணிப்பாக உள்ளது.

Most Read Articles
English summary

 Mercedes-Benz has promised to launch 15 new vehicles in India during 2015. Now the German manufacturer promises that out of the 15, one of the vehicles could be the Mercedes-AMG GT supercar.
Story first published: Saturday, February 14, 2015, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X