பெட்ரோல் விலை உயர்ந்தது, டீசல் விலை குறைந்தது

Written By:

தற்போதைய விலை மாற்றங்களின் படி, பெட்ரோல் விலை 36 பைசா உயர்ந்துள்ளது, டீசல் விலை மிக குறைந்த அளவில் 7 பைசா மட்டுமே குறைந்துள்ளது. இந்த விலைமாற்றம், அக்டோபர் 1, 2016 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை மாற்றங்களை அடுத்து, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 64.57 ரூபாயாகவும், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 52.52 ரூபாயாகவும் உள்ளது. இந்த சமீபத்திய விலை மாற்றங்களின் படி, கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக பெட்ரோலின் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், டீசல் விலை குறைந்துள்ளது.

பண பரிவர்த்தனையில் அமேரிக்க டாலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தான், பெட்ரோலிய பொருட்களின் இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது என ஐஒசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்தது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, October 1, 2016, 10:39 [IST]
English summary
As per the latest revision in fuel prices, price of petrol increase by 36 paise per litre and diesel price reduced marginally by 7 paise per litre. These rates are effective midnight, October 1, 2016. The latest price revision marks the third time in two months that petrol prices have gone up, while diesel prices have seen a reduction this month. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos