வால்வோ கார்கள் விலை உயர்வு - புதிய விலை பட்டியல்..!

வால்வோ நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்கள் விலையும் இந்தியாவில் உயர்தப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

சொகுசுக் கார் தயாரிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனம், இந்தியாவில் அதன் கார்கள் விலையில் குறைந்தபட்சமாக 54,750 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 2.5 லட்ச ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

1927ஆம் ஆண்டு முதல் ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வால்வோ நிறுவனம், இந்தியாவில் அதன் சொகுசு கார்களை 2007 முதல் விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஹோண்டா, ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, பென்ஸ், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்களது கார் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து தற்போது வால்வோ நிறுவனமும் விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது.

உற்பத்தி செலவீன அதிகரிப்பு காரணமாக வால்வோ நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வால்வோ நிறுவனத்தின் தொடக்க நிலை மாடலான 25.49 லட்ச ரூபாய் விலை கொண்ட வி40 டி3 கைனெடிக் காரின் விலையில் 54,750 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல வால்வோவின் அதிக விலை கொண்ட மாடலான ‘எக்ஸ்சி90 டி8 எக்ஸ்செலன்ஸ்' 4 சீட், பிளக்-இன்-ஹைபிரிட் காரின் விலையில் அதிகபட்சமாக 2.5 லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை 1.25 கோடி ரூபாய் ஆக இருந்தது.

விலையேற்றம் குறித்து வால்வோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத்தரமான கார்களை அளிப்பதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம், தற்போது உற்பத்தி செலவீன உயர்வு காரணமாக அனைத்து மாடல்களின் விலையும் ஏற்றப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வால்வோ கார்களின் புதிய விலைப் பட்டியல் வரும் ஸ்லைடர்களின் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப்பட்டியல்

மாடல்/வேரியண்ட் பழைய விலை புதிய விலை விலைவேறுபாடு
வி40 டி3 கைனெடிக் ரூ.25.49 லட்சம் ரூ.26.04 லட்சம் ரூ.54,750
வி40 ஆர்-டிசைன் ரூ.28.50 லட்சம் ரூ.29.10 லட்சம் ரூ.56,900
வி40 கிராஸ் கண்ட்ரி டி3 இன்ஸ்கிரிப்ஷன் ரூ.29.45 லட்சம் ரூ.30 லட்சம் ரூ.54,200
வி40 கிராஸ் கண்ட்ரி டி4 பெட்ரோல் ரூ.27.29 லட்சம் ரூ.27.85 லட்சம் ரூ.55,500

புதிய விலைப் பட்டியல்

மாடல்/வேரியண்ட் பழைய விலை புதிய விலை விலைவேறுபாடு
எஸ்60 கைனெடிக் ரூ.30.88 லட்சம் ரூ.31.64 லட்சம் ரூ.75,030
எஸ்60 மொமெண்டம் ரூ.35 லட்சம் ரூ.35.76 லட்சம் ரூ.75,030
எஸ்60 ஆர்-டிசைன் ரூ.38.50 லட்சம் ரூ.39.25 லட்சம் ரூ.75,000
எஸ்60 கிராஸ் கண்ட்ரி இன்ஸ்கிரிப்ஷன் ரூ.39.90 லட்சம் ரூ.40.65 லட்சம் ரூ.75,000
மாடல்/வேரியண்ட் பழைய விலை புதிய விலை விலைவேறுபாடு
எஸ்90 டி4 இன்ஸ்கிரிப்ஷன் ரூ.53.50 லட்சம் ரூ.54.50 லட்சம் ரூ.1,00,000
எக்ஸ்சி60 கைனெடிக் ரூ.44.80 லட்சம் ரூ.45.71 லட்சம் ரூ.90,500
எக்ஸ்சி60 மொமெண்டம் ரூ.47.99 லட்சம் ரூ.48.90 லட்சம் ரூ.90,200

புதிய விலைப் பட்டியல்

மாடல்/வேரியண்ட் பழைய விலை புதிய விலை விலைவேறுபாடு
எக்ஸ்சி60 இன்ஸ்கிரிப்ஷன் ரூ.51.70 லட்சம் ரூ.52.61 லட்சம் ரூ.90,400
எக்ஸ்சி60 ஆர்-டிசைன் ரூ.50 லட்சம் ரூ.50.90 லட்சம் ரூ.50.90 லட்சம்
எக்ஸ்சி90 மெமெண்டம் ரூ.70.96 லட்சம் ரூ.71.97 லட்சம் ரூ.1,00,000
எக்ஸ்சி90 இன்ஸ்கிரிப்ஷன் ரூ.80.23 லட்சம் ரூ.81.23 லட்சம் ரூ.1,00,000
எக்ஸ்சி90 ஆர்-டிசைன் ரூ.78 லட்சம் ரூ.79 லட்சம் ரூ.1,00,000
எக்ஸ்சி90 டி8 எக்ஸ்செலன்ஸ்-4சீட் ரூ.1.25 கோடி ரூ.1.27 கோடி ரூ.2,50,000

இந்தியாவில் கார்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே வால்வோ நிறுவனம், இந்தியாவில் பஸ்களை சந்தைப்படுத்தியுள்ளது.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் அரசு சொசுசு பேருந்துகள் அனைத்து வால்வோ நிறுவனத்தினுடைய பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Volvo cars price hike. new price list in tamil.
Please Wait while comments are loading...

Latest Photos