2019ல் அறிமுகமாகிறது வோல்வோவின் மின்சார கார்

Written by: Azhagar

வோல்வோ நிறுவனம் தனது முதல் மின்சார கார் தயாரிப்பை 2019ம் ஆண்டில் வெளியிடுகிறது. 400கிலோ மீட்டர் தூரம் வரை ஓடக்கூடிய வகையில் காரின் திறன் இருக்கும் என வோல்வோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க வோல்வோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெஸ் கெர்ஸ்சசிமேக்கர்ஸ், மின்சாரத்தில் இயங்கும் கார்கள் அமெரிக்காவின் முக்கிய தேவையாக உள்ளது என்றார், அதற்கான முன்தேவை கருதியே வோல்வோ தற்போது இதில் இறங்கியுள்ளதாகவும் லெஸ் கெர்ஸ்சசிமேக்கர்ஸ் கூறியிருக்கிறார்.

வோல்வோவின் புதிய மின்சார கார்கள், செவர்லேவின் போல்ட் இவி, டெஸ்லாவின் மாடல் 3 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கவுள்ளது. இந்த கார்கள் மார்கெட்டில் வந்தால் இந்திய மதிப்பில் ரூ.23லிருந்து ரூ.25 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோல்வோ தயாரிக்கும் மின்சார கார்களை குறித்து எந்த தகவல்களும் தற்போது வரை ஆட்டோமொபைல் உலகிற்கு எட்டவில்லை. ஆனால் அவை நிச்சயம் தோற்றத்திலும், வலிமையிலும் மற்ற எல்லா கார்களுக்கும் சவால் விடும் வகையில் உருவாக்கப்படும் என்பது மட்டும் ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

வோல்வோ தயாரித்து வரும் மின்சார கார், அந்த நிறுவனம் 2ம் தலைமுறையில் வெளியிட்ட XC90 மாடல் காரின் வடிவில்ல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் மற்றொரு தரப்பினர் வோல்வோவின் புதிய தயாரிப்பான XC60 கார் வடிவிலும் இருக்கலாம் என கூறுகின்றனர்.

ஆனால் அதே சமயத்தில் CMA platform என்று சொல்லக்கூடிய வோல்வோவின் பட்ஜெட் காரான XC40யின் வடிவிலும் மின்சார கார் வெளிவரலாம் என தகவல்களும் ஆட்டோமொபைல் உலகில் வலம் வருகிறது.

வோல்வோ நிறுவனத்தின் புதிய V90 காரின் புகைப்படத் தொகுப்பு

Story first published: Tuesday, March 21, 2017, 13:03 [IST]
English summary
Volvo CEO says the range is key to success and the electric car will debut in 2019 with 250 miles (400km) range.
Please Wait while comments are loading...

Latest Photos