அமெரிக்காவில் 7 சீட்டர் ஹூண்டாய் சான்டா பீ அறிமுகம்: இந்தியா வருமா?

அமெரிக்காவில் 7 சீட்டர் சான்டா பீ எஸ்யூவியை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலும் இந்த 7 சீட்டர் கார் அறிமுகமாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல் 5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட மாடல்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவில் விற்பனை செய்யும் வகையில் இடதுபுற டிரைவிங் வசதி கொண்ட மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் சான்டா பீ எஸ்யூவி விற்பனையில் பெரிய அளவில் சாதிக்காத நிலையில், 7 சீட்டர் மாடல் வந்தால் நிச்சயம் போட்டியாளர்களுக்கு சிறிது நெருக்கடியை கொடுக்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

அமெரிக்காவில் அறிமுகமாகியிருக்கும் சான்டா பீ அங்கு இந்திய மதிப்பில் ரூ.15.08 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

நீளம் அதிகம்

நீளம் அதிகம்

5 சீட்டர் சான்டா பீயைவிட புதிய 7 சீட்டர் சான்டா பீ எஸ்யூவி 3.9 இன்ச் நீளம் அதிகம்.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

7 சீட்டர் சான்டா பீயில் புதிய 3.3 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.

பவர்

பவர்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய வி6 எஞ்சின் 290 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மடக்கி விரிக்கும் வசதி

மடக்கி விரிக்கும் வசதி

கூடுதல் பொருட்களை வைக்க ஏதுவாக பின் வரிசை இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதி உள்ளது.

சொகுசு

சொகுசு

லெதர் இருக்கைகள், பக்கெட் சீட் ஆகியவை புதிய சான்டா பீ எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்.

இந்தியா வருமா?

இந்தியா வருமா?

இந்தியாவில் 7 சீட்டர் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படாது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 194 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எஞ்சின் கொண்ட 5 சீட்டர் மாடல்தான் இந்தியாவில் விரைவில் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஹூண்டாய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Hyundai has launched a seven seater version of the Santa Fe premium SUV in the US market following the huge success the regular 5-seater Santa Fe (sold as the the Santa Fe Sport). The 7 seater Santa Fe was first unveiled during the 2012 Now York Auto Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X