டஸ்ட்டரை சமாளிக்க வருகிறது குறைந்த விலை மஹிந்திரா எக்ஸ்யூவி

By Saravana

குறைந்த விலை கொண்ட எக்ஸ்யூவி 500 காரின் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. ஆனால், தற்போது எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருவதால் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Mahindra XUV 500

டஸ்ட்டர் மற்றும் விரைவில் வரும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியால் நிச்சயம் எக்ஸ்யூவிக்கும் நெருக்கடி ஏற்படும் என மஹிந்திரா கருதுகிறது. எனவே, போட்டியை சமாளிக்க ஒரே வழியாக குறைந்த விலை எக்ஸ்யூவியை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இதனை அந்நிறுவனத்தின் வேளாண்மை கருவிகள் உற்பத்திப் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார். குறைந்த விலை வேரியண்ட் மட்டுமில்லாது அதிக வசதிகள் கொண்ட புதிய உயர் ரக வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த புதிய வேரியண்ட்கள் உடனடியாக அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை என்றும் அவர் கூறினார்.

Most Read Articles
English summary
Mahindra and Mahindra's top official has confirmed that there will be a cheaper and a more expensive version of the XUV500 will be launched in future.
Story first published: Saturday, March 23, 2013, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X