Just In
- 39 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கார் வாங்கப் போகிறீர்களா? இந்த 6 வழிகளைப் பின்பற்றி காசை மிச்சப்படுத்துங்கள்...!!
நம்ம ஒரு கார் வாங்க மாட்டோமா? என்ற ஏக்கம் யாருக்குத்தான் இருக்காது... பெரும்பாலான மக்களின் கனவே கார் வாங்குவதாகத்தான் இருக்கும். ஆனால், அதை வெற்றிகரமாக நிறைவேற்ற எல்லோராலும் முடிவதில்லை.
சொந்தமாக வீடு வாங்கும் செலவுக்கு அடுத்தபடியாக ஒரு மனிதனுக்கு பெரிய செலவாக இருப்பது கார் வாங்குவதுதான். அப்படியாக ஒரு காரை வாங்கினாலும், அதற்கான கடனை அடைக்க வேண்டும். அல்லது வட்டியாவது கட்ட வேண்டும் என பல தலைவலிகள் வரும்.
பிறகு எப்படி அந்த காரில் நிம்மதியானதொரு பயணத்தை மேற்கொள்ள முடியும்? திட்டமிட்டு நீங்கள் கார் வாங்கினால் இந்தப் பிரச்னைகளையெல்லாம் தவிர்க்க முடியும். கொஞ்டம் ஸ்மார்ட்டாகவும், சமயோஜிதமாகவும் யோசித்து, உங்களுக்கென ஒரு காரை எந்தவிதமான சிக்கலுமில்லாமல் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகென்ன குடும்பத்துடன் சுற்றுலா கிளம்பி வாழ்க்கையை அனுபவிக்கலாம். அப்படி ஒரு மகிழ்ச்சியைத் தருவதற்காக, கார் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்....
பட்ஜெட்டைக் கணக்கிடுங்கள்....
கார் வாங்குவதில் முதலில் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் பட்ஜெட். உங்களிடம் உள்ள தொகை என்ன? அதற்கு எந்த காரை வாங்க முடியும்? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
லோன் மூலம் வாங்குவீர்களேயானால், முன்பணமாக எவ்வளவு தொகை செலுத்த முடியும்? கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி? உள்ளிட்ட விஷயங்களை கணக்கிட்டுப் பார்த்து முடிவெடுங்கள்.
இதைத்தவிர காருக்குண்டான சாலை வரி, மாநில வரி, இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களை சமாளிப்பது எப்படி என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு முன்கூட்டியே பட்ஜெட்டைத் திட்டமிட்டுவிட்டால், கடைசி நேர கூடுதல் செலவினங்களுக்கு அலைய வேண்டியதில்லை.
உங்களுக்குப் பொருத்தமான காரை முடிவு செய்யுங்கள்...
பட்ஜெட்டைத் தொடர்ந்து எந்த கார் வாங்கலாம் என சரியான முடிவெடுப்பது அவசியம். உங்களது பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலையில் நிறைய மாடல் கார்கள் உள்ளன. அதில் எது உங்களுக்குப் பொருத்தமானது என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
உதாரணமாக குடும்பத்துடன் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் என்றால், அதற்கு தக்கவாறு இடவசதியுடன் கூடிய காரைத் தேர்வு செய்வது அவசியம். அதேபோல், 30 கிலோ மீட்டருக்கும் குறைவாகவே தினந்தோறும் உங்கள் பயணம் இருக்குமாயின் டீசல் காரைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை.
இப்படியாக உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் உள்ள தேவைகளைப் பொருத்து நல்ல மாடல் காரை முடிவு செய்யுங்கள்.
பலகட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளுங்கள்...
குறிப்பிட்ட ஓரிரு மாடல் கார்களை இறுதி செய்திருப்பீர்களேயானால், அடுத்தகட்டமாக அந்த மாடல்கள் குறித்து சிறிய ஆய்வு மேற்கொள்ளுங்கள்.
அதன் விலை, சிறப்பம்சங்கள், செயல்பாடுகள், குறைபாடுகள் உள்ளிட்டவற்றை டிரைவ் ஸ்பார்க் போன்ற தரமான இணையதளப் பக்கங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
அந்த மாடல் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் தரும் கருத்துகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அருகில் உள்ள டீலரிடம் சென்று காரின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து கேட்டறிய வேண்டும்.
டெஸ்ட் டிரைவ்....
பொதுவாகவே ஒரு காரில் சோதனை ஓட்டம் மேற்கொண்டால், அது நன்றாக இருப்பதாகவே ஒரு தோற்றம் ஏற்படும். ஆனால், நீங்கள் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள், சுமாரான சாலைகள் ஆகியவற்றில் டெஸ்ட் டிரைவ் செய்து குறிப்பிட்ட மாடலை திருப்தியுடன் தேர்ந்தெடுங்கள்.
அப்போதுதான் அனைத்துவிதமான சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்களிலும் நீங்கள் தேர்வு செய்த மாடல் கார் எந்தவித சிக்கலும் இன்றி பயணிக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
விலை பேரம்....
கார்களுக்குப் பொதுவாகவே அதிகபட்ச சில்லறை விலையோ, ஒரே விலையோ கிடையாது. எனவே, அதன் விலையில் வழங்கப்படும் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும்.
அதைக் கருத்தில் கொண்டு சரியான விலைக்கு காரை வாங்குங்கள். பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வீர்களேயானால், அதற்கு உரிய விலையையும், போனஸையும் கேட்டுப் பெற வேண்டும். எந்த டீலர் சரியான விலையும், நியாயமான எக்ஸ்சேஞ்ச் போனஸும் தருகிறாரோ அங்கு கார் வாங்குவது நல்லது.
மகிழ்ச்சியோடு வாங்குங்கள்...
விலை பேரம் முடிவுக்கு வந்து விட்டால், முன்பணத்தைச் செலுத்தி காரை புக் செய்யலாம். அதற்கான விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் விதிகள், நிபந்தனைகளை நன்கு படித்துப் பார்த்த பிறகு கையொப்பமிடுங்கள். உரிய நேரத்தில் டெலிவரி கிடைக்குமா? இலவச சர்வீஸ் ஆஃபர்கள் எப்போது? என்பன உள்ளிட்ட கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
இந்த ஆறு வழிமுறைகளையும் பின்பற்றியிருந்தால், நீங்கள் ஸ்மார்ட்டாக காரை வாங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
பிறகென்ன... புதிய காரில், உங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியான தருணம் தொடங்கட்டும். டிரைவ் ஸ்பார்க்கின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?