ஏ ஆர் ரஹ்மான் கார் கலெக்ஷன்!

Written By:

தமிழ் திரை இசைக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஏ ஆர் ரஹ்மான். அதீத திறமையால் ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்தவர் ஏர் ரஹ்மான்.

இசையுடன் சேர்த்து இளமையையும் அருளப் பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இசை மீது உள்ள ஆர்வம் அளவுக்கு அவருக்கு கார்கள் மீது ஆர்வம் உண்டு. அதனால்தான், டொயோட்டா எட்டியோஸ் காரின் விளம்பர தூதராக ஒப்புக்கொண்டார். மேலும், டொயோட்டா பிராண்டு கார்களையும் நேசிக்கிறார் என்பது அவரது கார் கலெக்ஷனை பார்த்தால் புரியும்.

முதல் கார்

சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட ஏ ஆர் ரஹ்மானுக்கு எல்லாமே தாயார்தான். இந்தநிலையில், 1986ம் ஆண்டு ரஹ்மானின் தாய் அவருக்கு அம்பாசடர் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதனை இன்றும் பாதுகாத்து வருவதாக அவர் சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கத்தில் படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

1980களில் இந்தியாவின் சொகுசு கார் மாடலாக வலம் வந்தது அம்பாசடர். இசை கோர்ப்பு பணிகளுக்கு செல்வதற்கு இந்த காரை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இப்போது பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அந்த காரை தாயார் நினைவாக வைத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

மிக சொகுசான இருக்கைகள், எந்த சாலைக்கும் ஏற்ற சிறப்பம்சங்கள், வலுவான கட்டமைப்பு என எல்லோருக்கும் பிடித்துப் போன அம்பாசடர் கார் ஏ ஆர் ரஹ்மானையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. நீடித்த உழைப்பிலும் தன்னிகரில்லாத வாகனம்.

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ் காரின் விளம்பர தூதராக ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றினார். நம்பகத்தன்மையில் முதன்மை பிராண்டாக விளங்கும் டொயோட்டாவுக்கு இந்த கார் மிகச் சிறப்பான வர்த்தகத்தை பெற்று தந்துள்ளது.

இந்த காரை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் ஏ ஆர் ரஹ்மான் ஈடுபட்டார். இந்த நிலையில், இந்த காரையும் சொந்தமாக வாங்கி வைத்து பயன்படுத்தி வருகிறார் ஏ ஆர் ரஹ்மான்.

 

அதிக இடவசதியுடன், சரியான விலையில் கிடைக்கும் செடான் கார் என்பதே இதன் முக்கிய பலம். மேலும், மிட்சைஸ் செடான் கார்களுக்கும், காம்பேக்ட் செடான் கார்களுக்கும் இடையிலான ரகத்தை இந்த கார் நிரப்பி வருகிறது. தற்போது டாக்சி மார்க்கெட்டில் இந்த கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

சொகுசு எஸ்யூவி கார்களையே தனது பிரம்மாண்ட தோற்றத்தால் மிரட்டும் எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர். எனவே, அந்த எஸ்யூவி ஒன்றையும் ஏ ஆர் ரஹ்மான் வாங்கி வைத்துள்ளார். அவருக்கு பிடித்தமான மாடல்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் தோரணை விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி கார்களில் கூட கிடைக்காததால் ஏ ஆர் ரஹ்மான் இதனை வாங்கி வைத்திருக்கலாம். மேலும், டொயோட்டா பிராண்டு மீதான ஈர்ப்பு.

7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை அளிக்கும் இந்த எஸ்யூவி, ரஹ்மான் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து செல்வதற்கு இந்த எஸ்யூவி மிக பொருத்தமாக இருக்கும். ரூ.25 லட்சம் மதிப்பில் இந்த காரை அப்போது வாங்கியிருக்கிறார்.

இந்த கார்கள் தவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி மற்றும் ஆடி ஏ8 சொகுசு கார்களும் ஏ ஆர் ரஹ்மானிடம் உள்ளன. 

ஏ ஆர் ரஹ்மானிடம் உதவியாளராக இருந்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ் கார் கலெக்ஷனை பார்ப்பதற்கு இங்கே க்ளிக் செய்க.

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் கேலரி!

இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வரும் புத்தம் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Friday, January 6, 2017, 17:33 [IST]
English summary
AR Rahman Car Collection.
Please Wait while comments are loading...

Latest Photos