துளியும் மாசு ஏற்படுத்தாத ஃப்யூவல் செல் ரயில்: 2018ல் அறிமுகமாகிறது

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்கு உலக அளவில் தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை மாற்று எரிபொருளில் இயக்குவதற்கான முயற்சிகள் வெற்றிகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதில், ஹைட்ரஜனை அடிப்படை எரிபொருளாக வைத்து இயங்கும் ப்யூவல் செல் எலக்ட்ரிக் தொழில்நுட்பம் தற்போது பரவலாக பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ரயிலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அல்ஸ்டம் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.


சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

மாசு ஏற்படுத்தாத எரிபொருள் நுட்பத்தில் இயங்கும் இந்த ரயிலை தயாரித்து வழங்குவதற்காக ஜெர்மனியை சேர்ந்த பல மாகாண ரயில் போக்குவரத்து நிறுவனங்கள் அல்ஸ்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்த ரயிலை தயாரிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்குவதாகவும் உறுதி கொடுத்துள்ளன.

ரயில் மாடல்

ரயில் மாடல்

தற்போது அல்ஸ்டம் நிறுவனம் தயாரித்து வரும் கொரேடியா ரயில் அடிப்படையிலேயே புதிய ஃப்யூவல் செல் ரயில் வடிவமைக்கப்பட உள்ளது. ரயிலின் மேற்புறத்தில் ஃப்யூவல் செல்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து வரும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, மின்சார மோட்டார்கள் மூலம் ரயில் இயங்கும்.

சேமிப்பு

சேமிப்பு

ஃப்யூவல் செல் மூலம் இயக்கப்படும் இந்த எலக்ட்ரிக் ரயில்கள் மிக குறைவான எரிபொருள் செலவீனத்தை கொண்டதாக இருக்கும் என அல்ஸ்டம் தெரிவித்துள்ளது.

 தயாரிப்பு

தயாரிப்பு

ஜெர்மனியின் சால்ஸ்கிட்டர் என்ற இடத்தில் உள்ள ஆலையில் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன.

முதல் ஃப்யூவல் செல் ரயில்

முதல் ஃப்யூவல் செல் ரயில்

2018ம் ஆண்டு இறுதியில் 2 புரோட்டோடைப் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வர்த்தக ரீதியிலான சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படும் உலகின் முதல் ஃப்யூவல் செல் ரயில்களாக இவை இருக்கும் என அல்ஸ்டம் குறிப்பிடுகிறது.

நகர்ப்புறத்துக்கு ஏற்ற மாடல்

நகர்ப்புறத்துக்கு ஏற்ற மாடல்

நகர்ப்புறத்தில் மாசு ஏற்படுவதை இந்த ஃப்யூவல் செல் ரயில்கள் மூலம் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கிறது அல்ஸ்டம்.

அறிமுகம்

அறிமுகம்

2018ம் ஆண்டு ஃப்யூவல் செல் ரயிலின் புரோட்டோடைப் மாடலை வர்த்தக ரீதியில் இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில்...

இந்தியாவில்...

உலக அளவில் பல்வேறு நாடுகளில் அல்ஸ்டம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் அல்ஸ்டம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
France based Alstom has revealed its plan to develop an ‘emission-free’ battery train prototype by 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X