மும்பை- லண்டன் ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

மும்பை- லண்டன் இடையிலான ஜெட் ஏர்வேஸ் விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Saravana Rajan

ஜெர்மனி வான் பகுதியில் பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் தகவல் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானிகளின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்து இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

கடந்த 16ந் தேதி மும்பையில் இருந்து லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 விமானம் திடீரென தகவல் தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் 330 பயணிகள் மற்றும் 15 பயணிகள் இருந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஜெர்மனி விமான போக்குவரத்துத் துறை அதிரடியாக களத்தில் இறங்கியது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

விமானத்தை கண்டுபிடிப்பதற்காக, இரண்டு நவீன வகை தைபூன் ரக போர் விமானங்களை அனுப்பியது. சில நிமிடங்களில் ரேடாரிலிருந்து மறைந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தைபூன் போர் விமானங்கள் கண்டு பிடித்தன. அதைத்தொடர்ந்து, வான் போக்குவரத்து வழிகாட்டு விதிகளின்படி, பயணிகள் விமானத்திற்கு இடதுபுறமாக தைபூன் ரக போர் விமானங்கள் நெருங்கி சென்று ஜெட் ஏர்வேஸ் விமானிகளை எச்சரிக்கை செய்தது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

விமானத்தை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, டெல்லியில் இருந்து லண்டன் சென்ற மற்றொரு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தை தொடர்பு கொண்டு ஜெர்மனி கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

போர் விமானத்தின் எச்சரிக்கை சமிக்ஞையை ஜன்னல் வழியாக கவனித்துவிட்ட ஜெட் ஏர்வேஸ் விமானி சுதாரித்துக் கொண்டு விமான இயக்கத்தை சரிபார்த்துள்ளார். அதில், தகவல் தொடர்பு சாதனங்களை விமானி சரிபார்த்துள்ளார். அப்போது, தவறான தகவல் தொடர்பு அலைவரிசையில் விமானம் பறந்து கொண்டிருப்பதை கவனித்து உடனடியாக சரி செய்தார்.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

இதையடுத்து உஷாரான ஜெட் ஏர்வேஸ் விமான கட்டுப்பாட்டு மையம், உடனடியாக அவசர கால சேட்டிலைட் போன் மூலமாக அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தது. அதேபோன்று, அவசர கால 121.5 MHz என்ற அலைவரிசையின் மூலமாக தொடர்பு கொள்ளும் முயற்சியும் தோல்வி கண்டது. ஆனால், போனை விமானி எடுக்காததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

இதனையடுத்து, அந்த விமானம் உடனடியாக ஜெர்மனி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டதுடன், தொடர்ந்து சரியான வழித்தடத்தில் பயணித்து லண்டனில் பத்திரமாக தரை இறங்கியது. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் தலைமை விமானி தூக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

துணை விமானிதான் அந்த போயிங் 777 விமானத்தை செலுத்தியுள்ளார். அப்போது அவர் ஜெர்மனி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதற்கு, தவறான அலைவரிசையை தேர்வு செய்ததே இந்த குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் நுழையும்போது தகவல் தொடர்பு அலைவரிசையை மாற்ற வேண்டும். அதனை துணை விமானி தவறாக தேர்வு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம்.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

தவறான அலைவரிசையை தேர்வு செய்ததுடன், ஹெட் போனில் ஒலி அளவை மிக குறைவாக வைத்துக் கொண்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெற்ற தகவல்களை தவறாக புரிந்து கொண்டு விமானத்தை இயக்கியதும் தெரிய வந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

அந்த விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமானம் திக்கு தெரியாமல் பறந்து கொண்டிருந்தபோது, அதனை தைபூன் போர் விமானங்கள் நெருங்கி எச்சரிக்கும் தருணங்களை அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானத்தில் இருந்த கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்டு, அந்த வீடியோ வைரலாக பரவியது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

கிட்டத்தட்ட அரை மணிநேரம் தகவல் தொடர்பு இல்லாமல் அந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஜெர்மனி வான் எல்லையில் பறந்துள்ளது. உலகிலேயே நவீன வகை பயணிகள் விமான மாடலாக கருதப்படும் அந்த போயிங் 777-300ER விமானத்தை டவுன் பஸ் போல நினைத்துக் கொண்டு பைலட்டுகள் ஓட்டியிருப்பார்கள் என்றே கருத முடிகிறது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தொடர்பை இழந்ததற்கான காரணங்கள்!

ஜெர்மனி அரசும், வான் போக்குவரத்து துறையும் அதிரடியாக களத்தில் இறங்கியதால், அந்த விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது. இல்லையெனில், பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கானவர்களின் உயிருடன் விளையாடியதுடன், பணியில் கவனக்குறைவாக இருந்த அந்த விமானிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திக்கு தெரியாமல் பறந்த மும்பை- லண்டன் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை ஜெர்மனி விமானப்படையின் தைபூர் ரக போர் விமானங்கள் மீட்கும் தருணங்களை மற்றொரு விமானத்தின் பைலட் கேமராவில் பதிவு செய்துள்ளார். அதனை வீடியோவில் காணலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் அசத்தலான உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How German Air Force Planes Rescued A Jet Airways Flight.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X