பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

பிரபல அரசியல் தலைவர்களின் விருப்பமான எஸ்யூவி வகை கார்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

அரசியல்வாதிகளுக்கு கம்பீரமும், ஆளுமையும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. அவர்களது நடை, உடை, பாவனைகள் மட்டுமில்லாமல், அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களும் அவர்களது ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டி உள்ளது.

அதன்படியே, இந்தியாவின் பல பிரபல அரசியல் தலைவர்கள் எஸ்யூவி வகை வாகனங்களையே தங்களது ஆஸ்தான வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, பிரபல அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் எஸ்யூவி வாகனங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

விகே.சசிகலா

விகே.சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இப்போது அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார். ஜெயலலிதா பயன்படுத்திய ஆஸ்தான டொயோட்டா எல்சி200 எஸ்யூவியை இப்போது சசிகலா பயன்படுத்தி வருகிறார்.

பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

மிக கம்பீரமான தோற்றம், வசதிகள் என டொயோட்டா எல்சி200 எஸ்யூவி ஜெயலலிதாவின் மிக விருப்பமான மாடலாக இருந்தது. இப்போது சசிகலாவும் அந்த வாகனம்தான் தன் அரசியல் பயணத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்பி பயன்படுத்தி வருகிறார்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

குஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்தான வாகனமாக விரும்பி பயன்படுத்தியது மஹிந்திரா ஸ்கார்ப்பியோவைத்தான். முரட்டுத் தனமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை நரேந்திர மோடியை கவர காரணமாக சொல்லப்படுகின்றன.

பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

பிரதமராக பதவியேற்ற பிறகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை நரேந்திர மோடி பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனமும் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை மேம்படுத்தி தருவதாக உறுதி அளித்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போது அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார்.

 அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் விருப்பமான மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி. ஆஜானுபாகுவான தோற்றமும், சக்திவாய்ந்த எஞ்சினும் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் அமைச்சர் அருண் ஜெட்லியை மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் விருப்பமான வாகனமாக மாறி உள்ளது.

பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

தொடர்ந்து பயணங்களில் இருக்க வேண்டிய தேவை உள்ள அரசியல்வாதிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு அம்சங்களும் தேவைப்படுகிறது. அதற்காக, இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்று இருக்கின்றன.

சோனியா காந்தி

சோனியா காந்தி

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல்கள் சோனியா காந்திக்கு மிகவும் பிடித்தமான வாகனமாக இருக்கிறது. அஸ்தஸ்து, பாதுகாப்பு, வசதிகளில் ரேஞ்ச்ரோவருக்கு இணை வேறு மாடல்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

டெல்லியில் இருக்கும்போது அரசியல் பணிகள் மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக தினசரி பயன்பாட்டுக்கு சோனியா காந்தி அதிகம் பயன்படுத்துவது இந்த எஸ்யூவி மாடல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால் மாருதி வேகன் ஆர் காரை வைத்திருந்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தமான வாகனம் மஹிந்திரா தார் எஸ்யூவிதான். தேர்தல் பிரச்சாரங்கள், போராட்டங்களின்போது ஆதரவாளர்களுடன் இந்த எஸ்யூவியில் பவனி வருவதை கண்டிருக்க முடியும்.

 பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

இந்தியாவின் மிகச் சிறந்த ஆஃப்ரோடு வாகனமாக மஹிந்திரா தார் எஸ்யூவி விளங்குகிறது. மேலும், மிக குறைவான விலையில் ஆஃப்ரோடு பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்களை கொண்ட மாடலாகவும் வலம் வருகிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் விருப்பமான எஸ்யூவி வாகனம் டாடா சஃபாரி. பல ஆண்டுகளாக டாடா சஃபாரி எஸ்யூவியை ராகுல் காந்தி பயன்படுத்தி வருகிறார். டெல்லியில் மட்டுமில்லாமல், தேர்தல் பிரச்சாரங்களின்போதும் அதிகம் பயன்படுத்துவது டாடா சஃபாரிதான். அது வெளி மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும் டாடா சஃபாரிக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!!

கம்பீரமான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் ராகுல் காந்தியை கவர்ந்துள்ளது. பல சமயங்களில் டாடா சஃபாரியின் மேற்கூரையில் அமர்ந்து ராகுல் காந்தி சென்றிப்பதையும் பார்க்க வேண்டும். செயல்திறன் மிக்க எஸ்யூவி வாகனமாகவும், ஆஃப்ரோடு தகவமைப்புகள் பெற்ற வாகனமாகவும் டாடா சஃபாரி விளங்குகிறது. இதுதவிர்த்து, மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவியும் ராகுல் காந்திக்கு பிடித்த எஸ்யூவி மாடல்.

எஸ்யூவி பிரியர் ஜெயலலிதா

எஸ்யூவி பிரியர் ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எஸ்யூவி வாகனங்களின் காதலர். ஏனெனில், அவர் கடைசியாக பயன்படுத்திய டொயோட்டா எல்சி200 எஸ்யூவிகள்தான் பலருக்கு தெரியும். ஆனால், அவரிடம் மஹிந்திரா தார், மஹிந்திரா பொலிரோ, டொயோட்டா பிராடோ, டெம்போ ட்ராக்ஸ் போன்ற வாகனங்களை அவர் பயன்படுத்தியதுடன், அவற்றை தூக்கிப் போடாமல் தன் வீட்டு கராஜில் நிறுத்தி வைத்து அழகு பார்த்தார். மேலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியை கூட வாங்குவதற்கு விருப்பம் கொண்டிருந்தார். அந்த வாகனத்தை கொடநாடு எஸ்டேட்டுக்கு வரவழைத்து அதில் பயணித்து மகிழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் ஆல்பம்!

இன்று விற்பனைக்கு வரும் புதிய டாடா ஹெக்ஸா காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Familiar Indian Politicians And Their Favorite SUV Models.
Story first published: Wednesday, January 18, 2017, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X