மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் திடீர் குறைப்பு: புதிய கட்டண பட்டியல்..!

Written By:

காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பைக்குகள், சரக்கு வாகனங்கள், கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியத்தை குறைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச், 28 ம் தேதி மூன்றாம் நபர் வாகன காப்பீடு பிரீமியத்தை அதிகரித்து காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இதில், சரக்கு வாகனங்களுக்கான பிரீமியம் தொகை, 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. முன்பு, 15,365 ரூபாய் முதல், 24, 708 ரூபாய் வரை இருந்த பிரீமியம் தொகை, 23,047 ரூபாய் முதல், 37,062 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. இதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஒரு வாரம் ஸ்டிரைக் நடத்தினர்.

இந்நிலையில் மூன்றாம் நபர் வாகன காப்பீடு பிரீமியம் தொகையை குறைத்து, தற்போது புதிய அறிவிப்பை காபீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மார்ச், 28 ம் தேதி வெளியான அறிவிப்புக்கு மாற்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டும் காப்பீட்டு பிரீமியம் தொகை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய அறிவிப்பின்படி 21,511 ரூபாய் முதல் ரூ.36,120 ரூபாய் வரையும், 19,667 ரூபாய் முதல் 33,024 ரூபாய் வரையும் பிரீமியம் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய பிரீமியம் கட்டணம்

புதிய அறிவிப்பின்படி 1000சிசி-1500சிசி திறன் கொண்ட மத்திய தர கார்களுக்கு மார்ச் 28ல் அறிவிக்கப்பட்ட பிரீமியம் தொகையான 3,123 ரூபாயிலிருந்து 2,863 ரூபாயாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல 1500சிசிக்கும் மேற்பட்ட திறன் கொண்ட கார்களுக்கு மார்ச் 28ல் அறிவிக்கப்பட்ட 8,630 ரூபாயிலிருந்து தற்போது 7,890 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் 1000சிசிக்கு குறைவான திறன் கொண்ட கார்களின் பிரீமியம் தொகை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2,055 ரூபாய் கட்டணம் தொடர்கிறது.

150சிசிக்கு மேற்பட்ட மற்றும் 350சிசிக்கு உட்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 970 ரூபாயிலிருந்து 887 ரூபாயாக பிரீமியம் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஜாஜ் பல்சர் 150, ஹோண்டா யுனிகார்ன், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் உள்ளிட்ட பைக்குகளின் பிரீமியம் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல ஆட்டோக்களுக்கான பிரீமியம் தொகை 2,426 ரூபாயிலிருந்து 2,218 ரூபாயாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார ஆட்டோக்களுக்கான பிரிமீயம் தொகை 1,575 ரூபாயிலிருந்து 1,440 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்1க்கு பிறகு புதிய பாலிசிகளுக்கு வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வாகன காப்பீட்டு திட்டம் 2 வகையாக உள்ளது. அதில் முதலாவது தங்களுடைய சொந்த வாகனத்திற்கு ஏற்படக் கூடிய சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் காப்பீட்டு திட்டம்.

இரண்டாவதாக, மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் காப்பீட்டு திட்டம். இதில், மூன்றாம் தரப்பு வாகன காப்பீடு கட்டாயமாகும். 

மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், இறப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க இயலும்.

2017-18ம் நிதி ஆண்டுக்கான மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியத்தின் காப்பீடு பிரீமியத்தை கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அதிகரித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. லாரி உரிமையாளர்கள் ஒரு வாரம் ஸ்டிரைக் நடத்தினர்.

2017-18ம் நிதி ஆண்டுக்கான மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியத்தின் காப்பீடு பிரீமியத்தை கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அதிகரித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. லாரி உரிமையாளர்கள் ஒரு வாரம் ஸ்டிரைக் நடத்தினர்.

Story first published: Tuesday, April 18, 2017, 18:28 [IST]
English summary
Read in Tamil about IRDAI reduces third party insurance premium charges. find new rates in tamil
Please Wait while comments are loading...

Latest Photos