உலகின் விலையுயர்ந்த ராணுவ விமானங்கள் பற்றியத் தகவல்கள்!

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முதுகெலும்பாக வர்ணிக்கப்படும் போர் விமானங்கள் பற்றிய செய்தித் தொகுப்பை கடந்த வாரம் படித்திருப்பீர்கள். ஆனால், இந்த போர் விமானங்களை தயாரிப்பு தொழில்நுட்பம் என்பது பெரும்பாலான நாடுகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.

உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இணைவதற்காக எத்தனித்து வரும் நம் நாடு கூட சொந்த போர் விமானத்தை தயாரிக்கும் முயற்சிகளில் இப்போதுதான் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்துதான் போர் விமானங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், போர் விமானங்கள் மற்றும் ராணுவப் பயன்பாட்டு விமானங்களின் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று, உலகின் விலையுயர்ந்த விமானங்களையும் அந்த நாடு தயாரிக்கிறது. நவீன ரக விமானங்களை தயாரிப்பில் முன்னோடியாக திகழும் அமெரிக்காவிடம் இருக்கும் மிக விலையுயர்ந்த விமானங்களின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.


பட்டியல்

பட்டியல்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உலகின் விலையுயர்ந்த விமானங்களின் பட்டியலை காணலாம்.

10. எஃப்/ஏ - 18 ஹார்னெட்

10. எஃப்/ஏ - 18 ஹார்னெட்

அமெரிக்க தயாரிப்பான இந்த போர் விமானம் 1980ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தரை மற்றும் வான் தாக்குதல்களுக்கு சிறந்த மாடலாக குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவை தவிர்த்து கனடா, ஆஸ்திரேலியா, ஃபின்லாந்து, குவைத், மலேசியா, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் விமானப் படையில் செயலாற்றுகிறது. இந்திய மதிப்பில் ரூ.571 கோடி விலை கொண்டது.

9. இஏ- 18ஜி க்ரோவ்லர்

9. இஏ- 18ஜி க்ரோவ்லர்

முந்தைய ஸ்லைடில் பார்த்த எஃப்/ஏ- 18 போர் விமானத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் எதிரிகளின் தகவல் தொடர்பு மற்றும் ரேடார் சாதனங்களை செயலழிக்கச் செய்யும் வசதிகள் கொண்டது. தற்போது அமெரிக்க கப்பற் படையில் பயன்படுத்தப்படுகிறது. எதிரி நாட்டின் ரேடாரை கண்டுபிடித்து செயல்பாட்டை முடங்க வைக்கும் என்பதோடு, தகவல் தொடர்பையும் செயலற்று போகச் செய்யும் தொழில்நுட்பம் கொண்டது. இந்த விமானம் இந்திய மதிப்பில் ரூ.620 கோடி விலை கொண்டது.

 8. பெல் போயிங் வி-22 ஆஸ்பிரே

8. பெல் போயிங் வி-22 ஆஸ்பிரே

டில்ட்ரோட்டர் பொருத்தப்பட்டிருக்கும் இந்த விமானத்திற்கு ரன்வே தேவையில்லை. ஹெலிகாப்டர் போன்றே மேலே எழும்பும், இறங்கும் வசதி கொண்டது. அதேவேளை, நிலையான இறக்கை பொருத்தப்பட்ட விமானத்துக்கு இணையான வேகத்தில் செல்லும். கடந்த 2007ம் ஆண்டு ஈராக் போரில் இந்த விமானம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 509 கிமீ வேகம் வரை செல்லும். கடந்த 1988முதல் தயாரிப்பில் இருந்து வரும் இந்த விமானம் இதுவரை 200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.717 கோடி விலை கொண்டது.

7. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங்- II

7. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங்- II

அனைத்து சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக செயல்திறன் கொண்ட சிங்கிள் சீட்டர் விமானம் இது. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. இது பன்முக பயன்பாட்டு போர் விமானம். அமெரிக்காவின் நேச நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் நித ஆதாரத்துடன் வடிவமைக்கப்பட்டு, தற்போது தீவிர சோதனைகளில் இருந்து வருகிறது. இது மூன்று மாடல்களில் வெளிவருகிறது. அடிப்படை மாடல் இந்திய மதிப்பில் ரூ.742 கோடி விலை கொண்டது.

 6. நார்த்ராப் க்ரூமேன் இ-2 ஹாக்ஐ

6. நார்த்ராப் க்ரூமேன் இ-2 ஹாக்ஐ

அனைத்து சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ற இந்த விமானம் அமெரிக்க கப்பற்படையில் சேவையாற்றி வருகிறது. 1960ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானத்தின் நான்காம் தலைமுறை மாடல் 2007ல் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்கா தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல், சிங்கப்பூர், தைவான், பிரான்ஸ், எகிப்து ஆகிய நாடுகளிலும் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.1,411 கோடி மதிப்பு கொண்டது.

5. லாக்ஹீட் மார்ட்டின் விஎச்-71 கெஸ்ட்ரெல்

5. லாக்ஹீட் மார்ட்டின் விஎச்-71 கெஸ்ட்ரெல்

அமெரிக்க அதிபர் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட மாடல் இது. ஆனால், 2009ம் ஆண்டு இந்த ஹை-டெக் ஹெலிகாப்டரின் தயாரிப்பு செலவீனம் மிக அதிகமாக இருந்ததால், இதனை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். மொத்தம் 28 ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், 9 ஹெலிகாப்டர் வாங்கிய நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஒன்றின் விலை ரூ.1,466 கோடி.

4. போயிங் பி-8ஏ போசிடன்

4. போயிங் பி-8ஏ போசிடன்

போயிங் 737 ஜெட் விமானத்தின் ராணுவப் பயன்பாட்டு மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவமும் இந்த விமானத்தை ஆர்டர் செய்துள்ளது. ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வசதி கொண்ட இந்த விமானம் ரூ.1,764 கோடி மதிப்புடையது.

3. போயிங் சி17ஏ குளோப்மாஸ்டர்- III

3. போயிங் சி17ஏ குளோப்மாஸ்டர்- III

போர் முனைகளுக்கு வீரர்கள் மற்றும் தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கான வசதிகொண்டது. 190 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, மீட்புப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய விமானப் படையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு விமானத்தின் விலை ரூ.1,995 கோடியாக குறிப்பிடப்படுகிறது.

 2. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டர்

2. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டர்

தரை தாக்குதல், எதிரிகளின் தகவல் தொடர்பு சாதனங்களை தாக்கி அழித்தல், சிறந்த சிக்னல் தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்தவிமானம் 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஒப்பாக வேறு மாடல்களை குறிப்பிட முடியாது என்று ராணுவ வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது அமெரிக்க விமானப் படையில் 187 விமானங்கள் உள்ளன. ரூ.2,129 கோடி விலை மதிப்பு கொண்டது.

 1. நார்த்ராப் க்ரூமேன் பி-2 ஸ்பிரிட்

1. நார்த்ராப் க்ரூமேன் பி-2 ஸ்பிரிட்

அணுகுண்டு மற்றும் வெடிகுண்டுகளை வீசுவதற்கான அம்சங்களை கொண்டது. இரண்டு விமானிகள் இயக்குவதற்கு வசதிகொண்ட இந்த விமானத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் வெடிகுண்டுகளை குறிவைத்து வீச முடியும். மொத்தம் 21 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்க விமானப் படையில் செயலாற்றி வருகிறது. ஒரு விமானத்தின் விலை ரூ.4,483 கோடியாக குறிப்பிடப்படுகிறது.


Most Read Articles
English summary
The United States have produced some of the world’s most expensive as well as technologically advanced military aircraft. Here’s a top 10 list of the most expensive aircraft made in the U.S., is ascending order of price per unit.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X