மோட்டார் உலகின் விந்தைகளில் ஒன்று... கப்பல்களையே சுமந்து செல்லும் கப்பல்!!

கப்பல்களையே சுமந்து செல்லக்கூடிய உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலை பற்றியத் தகவல்களை காணலாம்.

நிலம் மற்றும் ஆகாய மார்க்கமாக செய்யப்படும் சரக்கு போக்குவரத்திற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. பிரம்மாண்டமான கருவிகள், அதிக அளவிலான பொருட்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்வதற்கு நீர் வழி சரக்கு போக்குவரத்தே சிறந்ததாக இருக்கிறது. அதற்காக, பல பிரம்மாண்டமான சரக்கு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கப்பல் விபரம்

கப்பல் விபரம்

கடல்பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான துரப்பணப் பணிகளுக்காக பயன்படும் மிகப்பெரிய எந்திரங்களையும், புதிய கப்பல் கூடுகளையும் எளிதாக கொண்டு செல்வதற்காக இரண்டு மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் கட்டப்பட்டன. MV Blue Marlin மற்றும் MV Black Marlin ஆகிய இரண்டு கப்பல்கள் கட்டப்பட்டன. 2000ம் ஆண்டில் புளூ மெர்லின் கப்பலும், 1999ல் பிளாக் மெர்லின் கப்பலும் கட்டப்பட்டன.

இயக்கும் நிறுவனம்

இயக்கும் நிறுவனம்

முதலில் இந்த இரு கப்பல்களும் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரிலிருந்து இயங்கும் ஆஃப்ஷோர் ஹெவி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வசம் இருந்தன. 2001ல் இந்த இரு கப்பல்களையும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனமான டாக்வைஸ் ஷிப்பிங் நிறுவனம் வாங்கி சொந்தமாக்கியது.

கப்பல்களையே சுமந்து செல்லும் கப்பல்!

அந்த வகையில், இன்று நீங்கள் பார்க்கப்போகும் இந்த சரக்கு கப்பலின் சிறப்பம்சங்கள் இதுவரை நீங்கள் கேள்விப்படாத விஷயங்களை தாங்கி வருகிறது. ஆம், கப்பல்களையே சுமந்து செல்லக்கூடிய உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலை பற்றியத் தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

இந்த இரு கப்பல்களின் பக்கவாட்டுப் பகுதிகளும் கப்பல் மற்றும் பிரம்மாண்ட எந்திரங்களை ஏற்றும் வகையில், தடுப்புகள் இல்லாதவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. துறைமுகங்களிலிருந்து ஒரு பெரிய மிதவையில் கப்பல்களை ஏற்றி வந்து, இந்த கப்பலில் வெகு எளிதாக ஏற்றிவிடுகின்றனர். அது எப்படி தெரியுமா?

Photo credit: Ryan C. McGinley, U.S. Navy

நீர்மூழ்கி அம்சம்

நீர்மூழ்கி அம்சம்

இதன் அடிப்பாகம் நீரில் குறிப்பிட்ட தூரம் வரையில் மூழ்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி, ஏற்ற வேண்டிய மிதவை, எந்திரம் அல்லது கப்பலை இதன் அடிப்பாகத்திற்கு நேராக கொண்டு வந்து நிறுத்திவிட்டு பின்னர் கப்பலை சிறிது மேலே எழும்ப செய்கின்றனர். இதன்மூலமாக, பக்கவாட்டில் உறுதியான இரும்பு சங்கிலிகளை வைத்து இறுக கட்டி, பின்னர் எளிதாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

கப்பல்களை ஏற்றிச் செல்லும் கப்பல்

கப்பல்களை ஏற்றிச் செல்லும் கப்பல்

முழுமையாக கட்டமைக்கப்படாத புதிய கப்பல்களின் உடல்கூடுகளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இந்த கப்பல்கள் மூலமாக எளிதாக எடுத்துச் செல்கின்றனர். மிதவைகளில் கப்பல் உடல்கூடுகளை பெரிய மிதவையில் அடுக்கி, பார்ஜர் கப்பல்கள் மூலமாக அந்த மிதவையை மெர்லின் கப்பல்களுக்கு கொண்டு வருகின்றனர். பின்னர், அந்த மிதவையை பார்ஜர்களின் உதவியுடன் மர்லின் கப்பலின் அடிப்பாகத்தில் நிறுத்தி வைத்து, எடுத்துச் செல்கின்றனர். புளூ மர்லின் கப்பல் பற்றிய ஓர் விசேஷமான தகவலை அடுத்த ஸ்லைடரில் காணலாம்.

நொண்டியான போர்க்கப்பல்

நொண்டியான போர்க்கப்பல்

ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் USS Cole என்ற போர்க்கப்பலை குறிவைத்து அல்கொய்தா இயக்கத்தின் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில், அந்த கப்பல் சேதமடைந்தது. இதையடுத்து, ஆஃப்ஷோர் ஹெவி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து புளூ மர்லின் கப்பலை, அமெரிக்க கடற்படை வாடகைக்கு எடுத்து இந்த போர்க்கப்பலை ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது.

Photo Credit: LTJG Chuck Bell,United States Navy.

சாதனை பயணங்கள்

சாதனை பயணங்கள்

இந்த கப்பல்களில் பிரம்மாண்டமான எந்திரங்கள் மற்றும் கப்பல்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதில், முக்கியமானதாக, 2005ம் ஆண்டு கடலில் மிதக்கும் தன்மை கொண்ட எக்ஸ்-பேண்ட் என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட மிதக்கும் ரேடார் மையத்தையே அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து அலாஸ்காவுக்கு கொண்டு சென்றது. இந்த கப்பல் சுமந்து சென்றது. இந்த மிதவை ரேடார் அமைப்பு 60,000 டன் எடை கொண்டது.

டிவியிலும் பிரபலம்

டிவியிலும் பிரபலம்

2005ம் ஆண்டில் ஸ்நோவிட் என்ற பிரம்மாண்ட எரிவாயு சுத்திகரிப்பு மையத்தை, கட்டுமான தளத்திலிருந்து நிறுவ வேண்டிய இடத்திற்கு இந்த புளு மர்லின் கப்பல் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த போக்குவரத்து முழுமையாக படம் பிடிக்கப்பட்டு, டிஸ்கவரி டிவி சேனலின் எக்ஸ்ட்ரீம் எஞ்சினியரிங் பகுதியில் ஒளிபரப்பப்பட்டது. இதேபோன்று, ஹிஸ்டரி சேனலின் மெகா மூவர்ஸ் நிகழ்ச்சி வாயிலாக ஒளிபரப்பானது.

 வடிவம்

வடிவம்

இந்த பிரம்மாண்ட கப்பல் 712 அடி நீளமும், 138 அடி அகலமும், 44 அடி உயர அடிப்பாகத்தையும் கொண்டது. இதில், கப்பலின் அடிப்பாகம் 33 அடி வரை நீரில் மூழ்க வைக்க இயலும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த கப்பலில் இருக்கும் ராட்சத எஞ்சின்கள் மொத்தமாக 16,950 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தக்கூடியது. மணிக்கு 26.9 கிமீ வேகத்தில் கடலில் பயணிக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 46,000 கிமீ தொலைவுக்கு செலுத்த முடியும்.

பணியாளர்களுக்கான வசதிகள்

பணியாளர்களுக்கான வசதிகள்

இந்த கப்பலில் 38 கேபின்கள் உள்ளன. அதில், 60 பணியாளர்கள் வரை தங்க முடியும். பிரம்மாண்ட சரக்கை எவ்வாறு கொண்டு செல்வது என்பதற்கான செயல்திட்டங்களை வகுப்பதற்கான அறை மற்றும் பணியாளர்களுக்கான பல வசதிகள் இந்த கப்பலில் உள்ளதையும் குறிப்பிட வேண்டியவை.

கப்பல்களையே சுமந்து செல்லும் பிரம்மாண்ட கப்பல்

இந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல்களை பார்த்து அசந்து போயிட்டீங்களா? கீழே உள்ள செய்திகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
This Giant Ship That Ships Other Ships.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X