புதிய ஸ்பிளென்டர், கரீஷ்மா பைக்குகள் உள்பட 15 புதிய தயாரிப்புகளை வெளியிட்ட ஹீரோ!

By Saravana

அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட புதிய கரிஷ்மா மற்றும் புதிய ஸ்பிளென்டர் ஆகியவற்றுடன் 15 புதிய தயாரிப்புகளை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா விலகிய பின் தனது மார்க்கெட்டை நிலைப்படுத்திக் கொள்ள ஹீரோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மேம்படுத்தப்பட்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் தவிர புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, டான் பைக்கை விட குறைந்த விலை பைக்கையும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய ஸ்பிளென்டர்

புதிய ஸ்பிளென்டர்

ஐ3எஸ் என்ற புதிய ஸ்டார்ப் ஸ்டார்ட் சிஸ்டத்துடன் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் என்ற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வினாடிகள் ஐட்லிங்கில் பைக் நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும் தொழில்நுட்பம்தான் இது. இதன்மூலம், தேவையில்லாத எரிபொருள் விரயத்தை தவிர்க்க முடியும் என்பதோடு, அதிக மைலேஜ் பெற முடியும். சில கார் மாடல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம் தற்போது ஸ்பிளென்டர் பைக்கில் கொடுத்துள்ளது ஹீரோ.

 புதிய ப்ளஷர் ஸ்கூட்டர்

புதிய ப்ளஷர் ஸ்கூட்டர்

ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக ஐபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் ப்ளஷர் ஸ்கூட்டரை ஹீரோ அறிமுகம் செய்துள்ளது. முன், பின் சக்கரங்களின் பிரேக்குகளை ஒரே லிவரில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்தான் இது. இந்த புதிய பிரேக்கிங் தொழில்நுட்பத்துக்கு ஹீரோ காப்புரிமை பெறுவதற்கும் பதிவு செய்துள்ளது. இதுதவிர, மொபைல் சார்ஜர், பூட்டி திறக்கும் வசதி கொண்ட கிளவ் பாக்ஸ், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய எக்ஸ்ட்ரீம்

புதிய எக்ஸ்ட்ரீம்

புதிய எக்ஸ்ட்ரீம் பைக்கில் எலக்ட்ரானிக் இம்மொபைலைசர் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சைடு ஸ்டான்ட் போட்டால் இக்னிஷன் தானியங்கி முறையில் அணைந்து விடும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, புதிய ஸ்பீடோமீட்டர், பைலட் லைட்டுகளுடன் கூடிய ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட் கிளஸ்ட்டர், மொபைல் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய எக்ஸ்ட்ரீம் வந்துள்ளது.

 புதிய கரிஷ்மா இசட்எம்ஆர்

புதிய கரிஷ்மா இசட்எம்ஆர்

கரிஷ்மாவுடன் நீண்ட காலமாக இந்த மார்க்கெட்டில் ஹீரோ வலுவான அடித்தளத்தை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட கரிஷ்மா மற்றும் இசட்எம்ஆர் பைக்குகளை ஹீரோ அறிமுகம் செய்துள்ளது. கரிஷ்மா இசட்எம்ஆர் பைக்குகளின் முகப்பு முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டு கூடுதல் கவர்ச்சியை பெற்றுள்ளது. ஹேண்டில்பார், பென்டர்கள், புதியம மஃப்லர் கவர், புதிய இருக்கை டிசைன், பெரிய டயர்கள் என ஓர் சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தை பெற்றுள்ளது.

புதிய ஸ்பிளென்டர் ப்ரோ

புதிய ஸ்பிளென்டர் ப்ரோ

புதிய ஸ்பிளென்டர் ப்ரோ பைக்கில் சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், கருப்பு நிற அலாய் வீல்களுடன் வந்துள்ளது.

புதிய பேஸன் ப்ரோ

புதிய பேஸன் ப்ரோ

புதிய பேஸன் ப்ரோ பைக்கில் சர்வீஸ் ரிமைன்டர் வசதி, சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், கருப்பு வண்ண சாரி கார்டு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், புதிய டயல் உள்ளிட்ட மாறுதல்களுடன் வந்துள்ளது.

புதிய கிளாமர்

புதிய கிளாமர்

கிளாமர் மற்றும் கிளாமர் எப்ஐ பைக்குளும் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் வந்துள்ளது.

இதர புதிய மாடல்கள்

இதர புதிய மாடல்கள்

ஹீரோ அறிமுகம் செய்தவற்றில் புதிய 100சிசி எச்எஃப் டான் மற்றும் எச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டருடன் வந்துள்ளன. புதிய ஸ்பிளென்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகளில் புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், டயல், சைடு ஸ்டான்ட் இண்டிகேட்டர் ஆகியவை கூடுதல் அம்சங்களாக கூறலாம்.

புதிய பட்ஜெட் பைக்

புதிய பட்ஜெட் பைக்

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் தவிர அடுத்ததாக புத்தம் புதிய குறைந்த விலை பைக்கை ஹீரோ வடிவமைத்து வருகிறது. டான் பைக்கைவிட குறைந்த விலையில் இந்த புதிய பைக் வரும் என ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார். பைக் உற்பத்தி செலவீனத்தை வெகுவாக கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், டான் பைக்கைவிட சிறிது குறைந்த விலை கொண்டதாக புதிய பைக் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விற்பனை

விற்பனை

பண்டிகை கால விற்பனையின்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த புதிய மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
This was expected, but big news nevertheless. India's largest two wheeler maker, Hero MotoCorp has showcased its 2014 product lineup. This includes a total of 15 new models, most of which consist of existing models, but with major updates to design and technological features
 
Story first published: Thursday, October 10, 2013, 21:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X