தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்கும் ஹோண்டா

By Saravana

இந்தியாவில் புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் மிட்சைஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை தாங்கி வரும் இந்த புதிய சூப்பர் பைக் மீது அதிக எதிர்பார்ப்பு பைக் பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த பைக் பலரின் கவனத்தை ஈர்த்தது. கவாஸாகி நின்ஜா 650 பைக்கிற்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த புதிய பைக் மாடல் இப்போதே ஆவலை ஏற்படுத்தியுள்ளதற்கு பல்வேறு சிறப்புகளை காரணமாக அடுக்கலாம். அதுகுறித்த சில தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


 இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இருவர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். மேலும், ஓட்டுபவருக்கு மிகச்சிறந்த ரைடிங் பொசிஷனை கொண்ட என்ட்ரி லெவல் பைக்காக வர இருக்கிறது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்கள் விரும்புவோருக்கு சரியான சாய்ஸாக இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 4 சிலிண்டர் 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து செயல்புரியும்.

சவால் விலை

சவால் விலை

இந்த பைக் இந்தியாவில் உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதனால், போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் கொண்டு வரலாம் என்றுமேலும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் முதல் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட பைக் மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய என்ட்ரி லெவல் சூப்பர் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸாகி நின்ஜா 650 பைக்கிற்கு மட்டுமல்லாது விலையில், டிரையஃம்ப் டேடோனா பைக்கிற்கும் நெருக்கடியை தரலாம்.

 விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

இந்தியாவிற்கு இந்த புதிய பைக்கை ஹோண்டா உறுதிப்படுத்தினாலும், அடுத்த நிதி ஆண்டின் 4வது காலாண்டில் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Japanese two wheeler manufacturer Honda will launch the CBR650F superbike in India by the end of next year. 
Story first published: Monday, September 22, 2014, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X