பெங்களூரில் இந்திய சூப்பர்பைக் திருவிழா துவங்கியது

பெங்களூரில், இந்திய சூப்பர் பைக் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று துவங்கியது. பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த சூப்பர் பைக் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.

கடந்த ஆண்டு புனேயில் நடந்த சூப்பர் பைக் திருவிழாவில் 500 பைக் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், பெங்களூரில் நடைபெறும் மூன்றாம் ஆண்டு திருவிழாவில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான பைக் உரிமையாளர்கள் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் திருவிழாவின் சில படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


 சூப்பர் பைக் திருவிழா

சூப்பர் பைக் திருவிழா

இந்த சூப்பர் பைக் திருவிழாவில் சுஸுகி ஹயபுசா, ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 உள்ளிட்ட பைக்குகள் பார்வையாளர்களாக வருபவர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

 டியூனிங் நிறுவனங்கள்

டியூனிங் நிறுவனங்கள்

இந்த சூப்பர் பைக் திருவிழாவில் பெங்களூர் மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த பைக் எஞ்சின் டியூனிங் நிறுவனங்கள், பைக் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பந்தய அணியினர் ஸ்டால்களை அமைத்துள்ளனர்.

டியூனிங் நிறுவனங்கள்

வசீகரித்த ஹோண்டா

வசீகரித்த ஹோண்டா

பார்வையாளர்களை வசீகரித்த ஹோண்டா பைக்குகளை படத்தில் காணலாம்.

 சுஸுகி ஸ்டால்

சுஸுகி ஸ்டால்

இந்தியாவில் சுஸுகி விற்பனை செய்யும் பைக் மாடல்களுக்கான பிரத்யேக அரங்கை படத்தில் காணலாம்.

திருப்தி

திருப்தி

இந்த சூப்பர் பைக் திருவிழா பைக் பிரியர்களுக்கு கண்கவர் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பெங்களூர் வாசகர்களுக்கு பீனிக்ஸ் மாலில் நடக்கும் இந்த சூப்பர் பைக் திருவிழா இந்த வார இறுதியை நிறைவானதாக்கும் என்று நம்புகிறோம்.

Most Read Articles
English summary
The third edition of India Superbike Festival 2014 has started off with a bang, or rather with a roar, as motorcycles of every breed have started rolling into the venue, with their engines thundering.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X