ரெக்ஸ்நமோவின் அருமையான எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் தனது முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் மோட்டார்சைக்கிளை ரெக்ஸ்நமோ நிறுவனம் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடல் இது என ரெக்ஸ்நமோ நிறுவனத்தின் சிஇஓ., நமன் சோப்ரா தெரிவிக்கிறார்.

தனது 14 ஆம் வயதிலிருந்து தந்தையுடன் இணைந்து பைக் வடிவமைப்பில் பாண்டித்தியம் பெற்றிருக்கும் நமன் சோப்ரா, ரெக்ஸ்நமோ நிறுவனத்தை துவங்கிய பின் முதலாவது மாடலாக படத்தில் காணும் எலக்ட்ரிக் க்ரூஸர் மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளார். தற்போது புரோட்டோடைப் மாடலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் 2015- 16ம் ஆண்டில் தயாரிப்பு நிலையை எட்டும் என்றும் நமன் தெரிவித்தார்.|

இந்த மோட்டார்சைக்கிளின் 80 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்படுவதாகவும், பேட்டரி உள்ளிட்ட சில முக்கிய பாகங்கள் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து சப்ளை பெறப்படுவதாக அவர் கூறுகிறார். இதன் விலை ரூ.3 லட்சத்தையோட்டியதாக இருக்கும். மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் படைத்த இந்த புதிய மோட்டார்சைக்கிளில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை செல்ல முடியும். சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் மட்டுமே போதும் என்றும் தெரிவிக்கிறார்.

Rexnamo bike

இந்த மோட்டார்சைக்கிளுக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களையும் சேர்த்து கஸ்டமைஸ் செய்து கொள்ளவும் முடியும். இது பேட்டரியில் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் சிறப்பானதாக இருக்கும் என்று தனது தயாரிப்புக்கு வலு சேர்க்கிறார் நமன் சோப்ரா. அடுத்த ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு அருமையான சூப்பர் க்ரூஸர் அல்லது சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நமன் எம்மிடம் தெரிவித்தார்.

ரெக்ஸ்நமோவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கம்

நமன் சோப்ராவின் ஃபேஸ்புக் பக்கம்

Most Read Articles
English summary
Among many international and national manufacturers, around the corner of the Auto Expo was a local company called Rexnamo. The company has developed an electric Cruiser which will deliver high performance as well as long range.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X