புல்லட்டை விற்றுவிட்டு பஜாஜ் டோமினார் பைக்கை வாங்கும் உரிமையாளர்கள்!

பஜாஜ் டோமினார் 400, பஜாஜ் பைக், பஜாஜ் டோமினார் பைக்

Written By:

கடந்த ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பஜாஜ் டோமினார் பைக் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சக்திவாய்ந்த எஞ்சின், அதிக சிறப்பம்சங்கள் மற்றும் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்ததால், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவரும் என்று இந்த பைக் அறிமுகத்தின்போது, பஜாஜ் ஆட்டோ தலைவர் எரிக் வாஸ் மற்றும் பஜாஜ் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் கூறியிருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் விதத்தில், இப்போது பஜாஜ் டோமினார் பைக்கின் விற்பனை பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆம், பஜாஜ் டோமினார் 400 பைக்கை வாங்கும் 10 வாடிக்கையாளர்களில் இருவர் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் என்று தெரிய வந்துள்ளதாம். பஜாஜ் டோமினார் 400 பைக்கை முன்பதிவு செய்யும்போது வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இது உறுதியாகி உள்ளது.

ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்கில் ஏராளமான நவீன சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போன்றவை இந்த பைக்கில் இருக்கின்றன.

அதேசமயத்தில், ரூ.1.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கில் இந்த நவீன சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை என்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. டிசைன், புகைப்போக்கி சப்தம் போன்றவை புல்லட்டுகளுக்கு தனித்தன்மை வழங்குகின்றன.

ஆனால், ராயல் என்ஃபீல்டு புல்லட்டுகளில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்படாமல் இருப்பதே இப்போது பஜாஜ் டோமினார் 400 பைக்கின் பக்கம் ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்கள் கவனம் திரும்பி இருக்கிறது. அத்துடன், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் எஞ்சின் மிகவும் அதிக அதிர்வுகள் இருப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பல வாடிக்கையாளர்கள் ஆவலோடு புல்லட்டுகளை வாங்கி பயன்படுத்தினாலும் கூட நாளடைவில் இந்த அதிகப்படியான அதிர்வுகள் என்பது அவர்களுக்கு பெரும் பிரச்னையாக மாறி விடுவதாக கருதப்படுகிறது. மேலும், கையாளுமையிலும், பிக்கப்பிலும் கூட பஜாஜ் டோமினார் 400 பைக் சிறப்பாக இருப்பதும் புல்லட் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி இருக்கின்றனர். அந்த வகையில், பஜாஜ் டோமினார் பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கிடைக்கிறது. ஆனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களில் இந்த வசதி இல்லை என்பது பின்னடைவாக இருக்கிறது.

எனினும், 350சிசி மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்தான் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தற்போது பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விற்பனை குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடக்கிறது. நாடுமுழுவதும் விற்பனை விரிவுப்படுத்தப்படும்போது, பஜாஜ் டோமினார் பைக்கின் விற்பனை மிகச் சிறப்பான எண்ணிக்கையை தொடும் என்று எதிர்பார்க்கப்பலாம்.

கேடிஎம் பைக் மாடல்கள், யமஹா ஆர்15, ஹோண்டா சிபிஆர் 150 உள்ளிட்ட இதே விலை ரகத்தில் உள்ள மாடல்களால் ராயல் என்ஃபீல்டு புல்லட்டுகளுக்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. ஆனால், முதல்முறையாக பஜாஜ் டோமினார் 400 பைக் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை சற்றே அசைத்து பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அதிகம் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகளை தொடர்ந்து காணலாம்.

Via - Hindu Businessline

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #பஜாஜ் #bajaj
Story first published: Friday, March 17, 2017, 11:57 [IST]
English summary
Read in Tamil: Dominar 400 Garners Royal Enfield Customers.
Please Wait while comments are loading...

Latest Photos