டாமினோர்400 பைக் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியது பஜாஜ் நிறுவனம்.. புதிய விலை விவரம்..!!

Written By:

பஜாஜ் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த பஜாஜ் டாமினோர்400 மோட்டார் சைக்கிளின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அல்லாத மாடல்களுக்கும் பொருந்தும்.

பஜாஜ் நிறுவனத்தின் முக்கிய மாடல்களுள் ஒன்றாக விளங்கி வரும் டாமினோர்400 பைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமானது.

அறிமுகப்படுத்தப்படும் போதே இது அறிமுக விலை தான் என்றும் இந்த பைக்கின் விலை பின்னர் அதிகரிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பைக்கின் விலையில் ரூ.2000 அதிகரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக டாமினோர்400 பைக்கின் விலையை அதிகரித்துள்ளது பஜாஜ் நிறுவனம்.

இந்தியாவில் பவர்ஃபுல் பைக்குகளின் மார்க்கெட் உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு டாமினோர் பைக்கை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

தற்போது டாமினோர்400 பைக்குகள் பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களுள் ஒன்றாக மாறியுள்ளது.
கேடிஎம் பைக்குகளில் உள்ள இஞ்சின் திறன் தான் இந்த பைக்குகளிலும் உள்ளது.

தற்போது மாதம் ஒன்றிற்கு சராசரியாக 3000 முதல் 4000 பஜாஜ் டோமினோர்400 பைக்குகள் விற்பனை ஆகி வருகிறது. இந்த பைக்கின் விலையை தற்போது இரண்டாவது முறையாக பஜாஜ் நிறுவனம் அதிகரித்துள்ளது.

இதன்படி டாமினோர்400 பைக்கின் விலையில் ரூ.1000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தும் போது இதன் ஏபிஎஸ் வேரியண்ட் விலை ரூ.1.5 லட்சமாகவும், ஏபிஎஸ் அல்லாத வேரியண்ட் ரூ.1.36 லட்சமாகவும் இருந்தது.

 

டாமினோர்400 பைக்கில் சிங்கில் சிலிண்டர் கொண்ட 373சிசி லிக்விட் கூல்ட் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 34 பிஹச்பி ஆற்றலையும், 35 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும்.

டிரிபிள் ஸ்பார்க் டெக்னாலஜி கொண்ட டாமினோர்400 பைக்கில் 6 ஸ்பீடு கியர் உள்ளது.

இந்த பைக்கில் எல்ஈடி ஹெட்லைட், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச், டெலஸ்கோபிக் ஃபிரண்ட் மற்றும் மோனோ ஷாக் பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை உள்ளது.

விலை

தற்போது புதிய விலை ஏற்றத்தின்படி பஜாஜ் டாமினோர்400 பைக்கின் விலை..

ஏபிஎஸ் வேரியண்ட் விலை ரூ.1.53 லட்சம், ஏபிஎஸ் அல்லாத வேரியண்ட் ரூ.1.39 லட்சம்.

 

குறைந்த விலை கொண்ட 400சிசி பைக் என்ற பெருமை பெற்ற பஜாஜ் டாமினோர்400 மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்350, கேடிஎம் டியூக் 250 மற்றும் மஹிந்திரா மோஜோ ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Bajaj dominar400 bike price hiked for secoond time since launch
Please Wait while comments are loading...

Latest Photos