Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331 விலையில் அறிமுகம்..!
ஹோண்டா லிவோ பைக் பிஎஸ்4 தர இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் உடன் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய லிவோ பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 110சிசி பைக் செக்மெண்டில் சிறந்து விளங்கும் பைக்குகளில் ஒன்றாக ஹோண்டா லிவோ பைக் இருந்து வருகிறது. நல்ல மைலேஜ் தருவதால் பலதரப்பினராலும் விரும்பப்படும் பைக்காக இது உள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன தயாரிப்பில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆக்டிவா ஸ்கூட்டர், சிபி ஷைன் பைக்குகளை தொடர்ந்து லிவோ பைக்கையும் பிஎஸ்4 தரத்தில் மேம்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
ஸ்டைலிங், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட லிவோ பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் சில புதிய அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
கரடு முரடான பாதைகளில் செல்லும் போதும் மைலேஜை அதிகரிக்க உதவும் வலிமைமிக்க விஷேச டயர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு தேவைப்படாத ஆற்றல் வாய்ந்த புதிய பேட்டரி மற்றும் முன்பக்க ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் ஆகியவை புதிய அம்சங்களாக இதில் இடம்பெற்றுள்ளன.
இஞ்சின்
மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக்கில் காற்றால் குளிர்விக்கப்படும் 109.19சிசி ஒன்றை சிலிண்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.31 பிஹச்பி ஆற்றலையும், 9 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
லிவோ பைக் 2,020மிமீ நீளமும், 738 மிமீ அகலமும், 1099 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 1285 மிமீ ஆக உள்ளது. இதன் எடை 111 கிலோ என்பதால் எளிதான ஹேண்ட்லிங்கை இந்த பைக் அளிக்கிறது.
வண்ணங்கள்
மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிமோ 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றை கீழே உள்ள பட்டியலில் காணுங்கள்..
- சன்செட் பிரவுன் மெட்டாலிக்
- அத்லெடிக் பிளூ மெட்டாலிக்
- கருப்பு
- பேர்ல் அமேசிங் ஒயிட்
- இம்பீரியல் ரெட் மெட்டாலிக்
- மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக்
புதிய ஹோண்டா லிமோ பைக் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 8.5 லிட்டர்கள் ஆகும்.
ஹோண்டா லிமோ பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெஷன் மற்றும் பின்புறம் 5 வகையில் மாற்றியமைத்துக் கொள்ளும் டூயல் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மைலேஜ்
லிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா லிவோ, டிவிஎஸ் விக்டர், ஹீரோ பாஷன் ப்ரோ, யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் மற்றும் சுசுகி ஹயாடே பைக்குகளுடன் போட்டியில் உள்ளது.
விலை விபரம்
புதிய 2017 ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.54,331 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.56,834 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்)
முதல்முறையாக 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா லிவோ பைக் அதன் பங்காளியான சிபி டிவிஸ்டர் பைக்கை காட்டிலும் விற்பனையில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!