கடந்த நிதி ஆண்டில் விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள்!

Written By:

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 2016-17 நிதி ஆண்டு காலக்கட்டத்தில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்து அசத்திய இருசக்கர வாகனங்களின் பட்டியலை இங்கே காணலாம்.

10. பஜாஜ் சிடி100

சென்ற நிதி ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டில் 9வது இடத்தில் இருந்த பஜாஜ் சிடி100 பைக் சென்ற நிதி ஆண்டில் 10வது இடத்தை பிடித்தது. மொத்தம் 4,52,712 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மிக குறைவான விலை, அதிக மைலேஜ் தரும் நம்பகமான பைக் மாடல் என்பது இதன் சிறப்பு. இருப்பினும், விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

09. பஜாஜ் பல்சர்

பல்சர் பைக் பிராண்டிற்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. கடந்த நிதி ஆம்டில் 5,82,912 பல்சர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. 2015-16 நிதி ஆண்டில் 8வது இடத்தில் இருந்த பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை கடந்த நிதி ஆண்டில் 9வது இடத்திற்கு இறங்கியது. இருப்பினும், விற்பனையில் ஏற்றம் பெற்றதால் பஜாஜ் கவலை கொள்வதற்கு இடமில்லை.

08. டிவிஎஸ் ஜுபிடர்

10வது இடத்தில் இருந்த டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் சென்ற நிதி ஆண்டில் 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சென்ற நிதி ஆண்டில் 6,13,817 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. ஆக்டிவாவிற்கு அடுத்து விற்பனையில் சிறந்த ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது டிவிஎஸ் ஜுபிடர். டிசைன், மைலேஜ், செயல்திறன், விலை ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

07. ஹீரோ கிளாமர்

கடந்த நிதி ஆண்டில் ஹீரோ கிளாமர் பைக் 7வது இடத்தை பிடித்தது. சென்ற நிதி ஆண்டில் 7,43,798 கிளாமர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. சிறந்த எஞ்சின், மைலேஜ் உள்ளிட்டவற்றுடன் கிடைக்கும் நம்பகமான 125சிசி பைக் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

06. ஹோண்டா ஷைன்

கடந்த நிதி ஆண்டில் 6வது இடத்தை ஹோண்டா சிபி ஷைன் பைக் பிடித்தது. 125சிசி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக தொடர்ந்து தன்னை தக்க வைத்து வருகிறது. சென்ற நிதி ஆண்டில் 7,49,026 ஹோண்டா சிபி ஷைன் பைக். நடுத்தர வயதுக்காரர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

05. ஹீரோ பேஷன்

கடந்த நிதி ஆண்டில் 8,70,382 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. சென்ற நிதி ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. ஆனாலுமம், டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வு.

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

4 ஸ்ட்ரோக் எஞ்சினுடன் அறிமுகமானதற்கு பின்னர், டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் விற்பனை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. கடந்த ஆண்டில் 8,90,367 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகி அசத்தி இருக்கின்றன. இந்தியாவின் மிக குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கிறது.

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த நிதி ஆண்டில் மிக குறைவான விலையில் கிடைக்கும் மிகச் சிறந்த பைக் மாடல் ஹீரோ டீலக்ஸ். கடந்த நிதி ஆண்டில் 14,08,356 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மிகச் சிறந்த பட்ஜெட் மாடல் என்பதால் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த நிதி ஆண்டில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் இரண்டாம் இடத்தையே பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 25,50,830 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. சிறந்த வடிவமைப்பு, நம்பகமான எஞ்சின், தோதான விலை போன்றவை ஸ்பிளென்டரை தொடர்ந்து பைக் மார்க்கெட்டின் முதல்வனாக வைத்திருக்கிறது.

01. ஹோண்டா ஆக்டிவா

ஹீரோ ஸ்பிளென்டருடன் நடந்த கடுமையான போட்டியின் இறுதியில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். கடந்த நிதி ஆண்டில் 27,59,835 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. செயல்திறன் மிக்க எஞ்சின், சிறந்த டிசைன் போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிகச் சிறந்த தேர்வு.

பருவமழை பொய்தததையடுத்து, ஊரகப் பகுதிகளில் இருசக்கர வாகன விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதுவே ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் விற்பனையில் மந்த நிலை இருப்பதாக கருதப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் ஸ்பிளென்டர், ஆக்டிவா இடையிலான யுத்தம் தொடரும் என்றே கருதப்படுகிறது.

மேலும்... #டாப் 10 #top 10
English summary
Top 10 Two-Wheelers in India By Sales FY 2016-17.
Please Wait while comments are loading...

Latest Photos