புதிய ஹீரோ ப்ரோ டிஆர் பைக் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்

By Saravana

ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட புதிய ஹீரோ பேஸன் ப்ரோ டிஆர் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு ஹீரோ டீலர்களில் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.

பேஸன் ப்ரோ பைக்கில் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்ட இந்த புதிய பைக் மாடல் சாதாரண சாலைகள் மற்றும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றதாக ஹீரோ தெரிவிக்கிறது.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.53,531 விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சாதாரண பேஸன் ப்ரோ பைக் மாடலைவிட ரூ.6,000 கூடுதல் விலை கொண்டதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு மாடலில் கிடைக்கும்.

ஆஃப்ரோடு சமாச்சாரங்கள்

ஆஃப்ரோடு சமாச்சாரங்கள்

ஆஃப் ரோடு டயர்கள், ஹெட்லைட்டுக்கு கீழே ஒட்டினாற் போல் கொடுக்கப்பட்டிருக்கும் ஃபென்டர், எஞ்சினை பாதுகாக்கும் எஞ்சின் கார்டு, கைகளுக்கு பாதுகாப்பு தரும் நக்கிள் புரொடெட்டர், பெட்ரோல் டேங்கில் பிளாஸ்டிக்கிலான முழங்கால் பேடுகள், ஹெட்லைட் கிரில் ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன. ஹெட்லைட்டுக்கு கீழே ஃபென்டர் வந்துவிட்டதால், நம்பர் பிளேட் ஹெட்லைட் ஸ்கூப்புக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

எஞ்சின்

எஞ்சின்

சாதாரண பேஸன் ப்ரோ பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 97.2சிசி எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் இருக்கிறது. இந்த எஞ்சின் 7.8 பிஎஸ் பவரையும், 8.04 என்எம் டார்க்கையும் அளிக்கும். 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

முன்புறத்தில் 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக், குறைவான பராமரிப்பு பேட்டரி, ஆப்ஷனலாக எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகியவை உண்டு. 12.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. 119 கிலோ எடை கொண்டது. இந்த பைக் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இலக்கு

இலக்கு

கிராமப்புற மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் இறக்கியுள்ளது. அடுத்து டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பிளென்டர் அடிப்படையிலான கஃபே ரேஸர் மாடலை ஹீரோ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Country's largest two wheeler manufacturer Hero Motocorp has launched New Passion Pro TR bike in domestic market. The new Hero Passion Pro TR comes in with added features and a host of off road accessories.
Story first published: Friday, July 25, 2014, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X