புதிய புல்லட் 500ன் விபரங்கள் மற்றும் படங்களை வெளியிட்ட ராயல் என்பீல்டு

தனது இணையதளத்தில் புதிய புல்லட்டின் விபரங்களையும், படங்களையும் வெளியிட்டிருக்கிறது ராயல் என்பீல்டு. காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் புதிய எஞ்சின் உள்ளிட்ட மாற்றங்களுடன் வருகிறது புதிய புல்லட்.

ஃபாரஸ்ட் கிரீன் என்ற புதிய வண்ணத்தில் புல்லட் கிடைக்கும். கிளாசிக் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள்களைவிட குறைவான விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய புல்லட்டில் 499சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு டிவின்ஸ்பார்க் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்டருக்கு பதிலாக கார்புரேட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், இதன் பவர் சற்று குறைந்துள்ளது.

பவர்

பவர்

கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் உள்ளதால் 27.2 பிஎச்பி ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. ஆனால், புதிய புல்லட்டின் எஞ்சின் 26.1 பிஎச்பி ஆற்றலையும், 40.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

புதிய புல்லட்டில் 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. பெட்ரோல் டேங்கில் சில்வர் மற்றும் சிவப்பு வண்ணக் கலவையில் ராயல் என்பீல்டு பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

டிவின் பைலட் லேம்புகளுடசன் ஹாலோஜன் பல்பு கொண்டிருப்பதால் அதிக பிரகாசத்தை வழங்கும்.

குஷனுடன் கிராப் ரெயில்

குஷனுடன் கிராப் ரெயில்

பின்புறம் கிராப் ரெயிலில் குஷன் பொருத்தப்பட்டிருப்பதால் பின்னால் அமர்ந்து செல்பவருக்கு சுகமான, பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்பக்கத்தில் 130மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் 80மிமீ டிவின் கேஸ் ஷாக் அப்சார்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. டெயில் லேம்ப் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை ஒத்த அதே பழைய டிசைன் கொண்ட டெயில் லைட்டுகள்தான்.

டிஸ்க்பிரேக்

டிஸ்க்பிரேக்

முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை அறிவிக்கப்படவில்லை

விலை அறிவிக்கப்படவில்லை

அனைத்து விபரங்களையும் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், புதிய மோட்டார்சைக்கிளின் விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், கிளாசிக் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 பைக்குகளைவிட குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield has added a new model to its Bullet line-up. The new Bullet 500 will be powered by the same engine as that on the Classic 500 sans fuel-injection though the price hasn't been revealed yet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X