கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வேரியண்ட்டில் ஹோண்டா அமேஸ் அறிமுகம்

By Saravana

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஹோண்டா அமேஸ் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இந்த புதிய 'சேஃப்டி பேக்' வேரியண்ட் கிடைக்கும். இந்த புதிய வேரியண்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

SX என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் S வேரியண்ட்டுக்கு மேலே இந்த புதிய வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் மட்டுமே வந்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் S வேரியண்ட்டில் கிடைக்கும் அத்துனை வசதிகளும் இந்த புதிய வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

ஏற்கனவே டீசல் மாடலின் அனைத்து வேரியண்டடுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் மாடலின் VX வேரியண்ட்டை தவிர்த்து தற்போது SX வேரியண்ட்டிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும்.

விற்பனை

விற்பனை

இதுவரை 60,000 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. போட்டி அதிகமாகி வருவதையடுத்து, டாப் வேரியண்ட்டுக்கும் கீழே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் S வேரியண்ட்டில் தற்போது கூடுதல் பாதுகாப்பு வசதிகளை சேர்த்து புதிய வேரியண்ட்டாக அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா நம்பிக்கை

ஹோண்டா நம்பிக்கை

எப்போதுமே மிட் வேரியண்ட்டுகள்தான் விற்பனையில் அதிகமிருக்கும். எனவே, இந்த புதிய எஸ் மிட் வேரியண்ட்டில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.

 விலை

விலை

ஹோண்டா அமேஸ் எஸ்எக்ஸ் பெட்ரோல் மாடல் ரூ.6,22,640 விலையிலும், டீசல் எஸ்எக்ஸ் வேரியண்ட் ரூ.7,12,240 விலையிலும் கிடைக்கும். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

முழு விபரம்

முழு விபரம்

ஹோண்டா அமேஸ் காரின் இந்த வேரியண்ட் ஓகேவா... இந்த புதிய வேரியண்ட்டுக்கும், மற்ற வேரியண்ட்டுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து உள்ளே வாருங்கள்.

 
English summary
Honda Cars India Ltd. (HCIL), leading premium car manufacturer in India, announced a new ‘SX' variant of the Honda Amaze with added safety features. The new variant will be positioned above the ‘S' variant and will be available in both Petrol and Diesel Manual Transmission.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+