சவுகரியமாக அமர்ந்து செல்லும் வசதியை தரும் புதிய சாய்மான இருக்கைகளுடன் மஹிந்திரா குவான்ட்டோ தற்போது கிடைக்கிறது.
இந்த ரக வாகனங்களில் முதல்முறையாக இதுபோன்ற சொகுசு இருக்கைகளுடன் வந்திருக்கும் முதல் வாகனமாக குவான்ட்டோவை மஹிந்திரா குறிப்பிடுகிறது.
யோகா இருக்கைகள்
யோகா இருக்கைகள் என்று அழைக்கப்படும் இந்த இருக்கைகளை 36 விதமான நிலைகளில் சாய்த்துக் கொள்ள முடியும். இதன்மூலம், பயணிக்கும்போது மிக சொகுசான அனுபவத்தை பெற முடியும்.
சவுகரியம்
2வது வரிசையில் யோகா இருக்கைகளுடன் நடுவில் ஆர்ம் ரெஸ்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 3வது வரிசை இருக்கையையும் முடிந்தவரை சவுகரியமாக அமரும் வசதியுடன் குவான்ட்டோ மாறியுள்ளது. தவிரவும், 2வது வரிசை இருக்கையை முழுவதுமாக முன்புற இருக்கையுடன் சேர்த்து மடக்கி வைக்க முடியும் என்பதால் அதிகபட்ச பொருட்கள் வைப்பதற்கான இடவசதியையும் பெற முடியும்.
எஞ்சின்
மஹிந்திரா குவான்ட்டோவில் 100 பிஎச்பி ஆற்றலையும், 240 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ்
டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும் குவான்ட்டோ லிட்டருக்கு 17.1 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது ஏசி போடப்பட்ட நிலையில், லிட்டருக்கு 11.4 கிமீ மைலேஜ் கொடுத்தது.
டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
விலை விபரம்
ரூ.5.99 லட்சம் முதலான ஆரம்ப விலையிலிருந்து மஹிந்திரா குவான்ட்டோ கிடைக்கிறது. மஹிந்திரா குவான்ட்டோவின் வேரியண்ட்டுகளில் இருக்கும் அம்சங்கள், வசதிகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை ஒப்பீடு செய்து பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications