மஹிந்திரா குவான்ட்டோ டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

கடவுள் பாதி, மிருகம் பாதி கான்செப்ட்டில் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் அம்சங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவியான குவான்ட்டோவை கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வந்தது மஹிந்திரா. எதிர்பார்த்தது போலவே விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கு குவான்ட்டோவை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை மஹிந்திரா கடந்த வாரம் வழங்கியிருந்தது. பெங்களூரிலிருந்து ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகேயுள்ள ஹார்ஸ்லி ஹில்ஸ் வரை டெஸ்ட் டிரைவ் செய்து குவான்ட்டோவின் சாதக பாதக அம்சங்களை இங்கே வழங்குகிறோம். மேலும், டிரைவ்ஸ்பார்க் டெஸ்ட் டிரைவ் செய்த சி8 டாப் வேரியண்ட் காரின் அம்சங்களை விரிவாக வழங்கியிருக்கிறோம்.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

ஸைலோவின் பின்புறத்தை கத்தரி போட்ட மாடல்தான் குவான்ட்டோ. மேலும், முகப்பு சாட்சாத் ஸைலோதான். எனவே, பார்த்து பழக்கப்பட்ட முகப்பு என்பதால் விரிவாக கூறுவதற்கில்லை.

சைடு டிசைன்

சைடு டிசைன்

4 மீட்டருக்குள் சுருக்கப்பட்டிருப்பதால் பின்புற வீலுடன் ஒட்டினாற்போல் கார் பொசுக்கென முடிந்துவிடுவது போன்று தோற்றமளிப்பது சற்று உறுத்தலாக தெரிகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஸைலோவின் கவர்ச்சி கண்ணழகி ஹெட்லைட்தான் குவான்ட்டோவிலும். இரவிலும் பிரகாசமான வெளிச்சத்தை தருவதால் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது.

 பின்புற வடிவமைப்பு

பின்புற வடிவமைப்பு

பின்புறத்தில் எஸ்யூவி தோற்றத்தை எளிதாக காண்பிக்கிறது. டேஞ்சர் லைட் பின்னால் வரும் வாகனங்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் மிகவும் உயரமாக பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்பேர் வீல் பின்புற கதவில் பொருத்தப்பட்டு உள்ளது. ரியர் வைப்பரும் உண்டு.

எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ்

எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ்

குவான்ட்டோவில் எம்ஹாக் வரிசையை சேர்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் ஓட்டியதில், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறந்த எஞ்சின் என்று சொல்லலாம். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓவர்டேக் செய்ய கியரை குறைக்க வேண்டியிருக்கிறது. அதேவேளை, ஸ்மூத்தாக இருப்பதையும் கூறியாக வேண்டும்.

உள்ளலங்காரம்

உள்ளலங்காரம்

டேஷ்போர்டும் ஸைலோதான். சென்ட்ரல் கன்சோலின் மேலே டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், காரின் வேகம், வெப்பநிலை உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளலாம். அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங்கும் உபயோகரமானதாக இருக்கிறது. முன் இருக்கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆர்ம் ரெஸ்ட்டுகள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி இருந்தாலும் சவுகரியமாக இல்லை. ஸ்டீயரிங் வீல் கீழே ஹெட்லைட் கன்ட்ரோல் நாப் கூட நீளம் குறைவாக இருப்பதால் டிரைவிங்கின்போது சவுகரியமாக இல்லை.

ஆடியோ, ஏசி

ஆடியோ, ஏசி

டிஜிட்டல் மீட்டருக்கு கீழே 2 டின் ஆடியோ சிஸ்டம், ஏசி கன்ட்ரோல் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எளிதாக இயக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இல்லை. ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பமும் இருப்பதால் எரிபொருள் சிக்கனத்தை பெற முடிகிறது.

பவர் விண்டோஸ்

பவர் விண்டோஸ்

முன்வரிசை மற்றும் பின்வரிசைகள் பவர் விண்டோஸ் இருக்கிறது. டிரைவர் பக்கத்தில் இருக்கும் கதவில் பொதுவான கன்ட்ரோல் சுவிட்சுகளும், ஒவ்வொரு கதவிற்கும் தனித்தனியான சுவிட்சுகளும் உள்ளன.

கன்ட்ரோல் பட்டன்கள்

கன்ட்ரோல் பட்டன்கள்

ஸ்டீயரிங் வீலுக்கு வலது பக்கத்தில் டேஷ்போர்டில் டீசல் டேங்க் திறப்பதற்கான சுவிட்ச், ஹெட்லைட் அட்ஜெஸ்ட்மென்ட், ரியர் வியூ மிரர் அட்ஜெஸ்ட்மென்ட் ஆகியவற்றிற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 30 கிமீ வேகத்தை தொட்டவுடன் கதவுகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும் வசதியும் உள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவீட்டு மானியும், டிஜிட்டல் கிலோமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுதவிர, 100 கிமீ வேகத்தை கடக்கும்போது பீப் ஒலி எழுப்பி எச்சரிக்கும் வசதி இருக்கிறது. ஆனால், இரவு பயணத்தின்போது இது கொஞ்சம் தொல்லையாக இருக்கலாம்.

ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

கதவுகளில் பொருட்களை வைப்பதற்கான டோர் பாக்கெட் உள்ளன. பின் இருக்கைக்கு கீழேயும் ஸ்டோரேஜ் வசதி உண்டு.மேலும், கதவில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அலாய் வீல்

அலாய் வீல்

15 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது கவர்ச்சியாக இருக்கிறது. அதேவேளை, காரின் பெரிய உருவத்திற்கு ஏற்ற வகையில் இல்லாமல் சிறியதாக தெரிகின்றன.

ரியர் பார்க்கிங் சென்சார் திரை

ரியர் பார்க்கிங் சென்சார் திரை

டிரைவருக்கு மேலே இருக்கும் ரியர் வியூ மிரரின் இடது ஓரத்தில் இருக்கும் சிறிய திரையில் ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னால் இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் வசதி இருக்கிறது. கழுத்தை திருப்பி பார்த்து ரிவர்ஸ் எடுக்க வேண்டாம்.

இரண்டாவது வரிசை

இரண்டாவது வரிசை

இரண்டாவது வரிசை இருக்கைகள் உயரமானவர்களுக்கு கூட தாராள இடவசதியை கொடுக்கிறது. லெக்ரூம், ஹெட்ரூம் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கு வசதியாக முன் இருக்கையின் பின்புறம் 2 மடக்கி விரிக்கும் வசதிகொண்ட டிரே கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது வரிசை இருக்கைக்கு தனியாக ஏசி வென்ட்டுகள் இல்லை.

கடைசி வரிசை

கடைசி வரிசை

கடைசி வரிசை இருக்கைகள் ஒப்புக்கு இருக்கின்றன. சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். அப்படியிருந்தாலும் வசதியாக இல்லை. இந்த இருக்கைகளை மடக்கிக் கொள்ளும் வசதி இருப்பதால் பொருட்களை வைத்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும். பின்புறத்தின் தளத்தில் ஜாக்கி கிட் வெளியில் தெரியாத அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கதவில் சைல்டு சேஃப்டி லாக் வசதியும் உண்டு.

பாடி ரோல்ஓவர்

பாடி ரோல்ஓவர்

குறைவான நீளத்தில் உயரமான காராக இருப்பதால் திடீரென திருப்ப நேர்ந்தாலோ அல்லது வேகமாக செல்லும்போதும் பாடி ரோல் ஓவர் இருக்கிறது. மேடு பள்ளங்களில் விழும்போது ரன்னிங் போர்டு மற்றும் பின்புற படிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் எளிதாக தரையில் உரசுகின்றன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

இரவில் எளிதாக சாவியை சொருகுவதற்கு வசதியாக க்ளோ லைட், இறங்கும்போது தரை தெரிவதற்காக கதவில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய லைட் என ஏராளமான வசதிகளை கொடுத்து அசத்தியிருக்கிறது மஹிந்திரா.

மைலேஜ்

மைலேஜ்

500 கிமீ வரை நாம் டெஸ்ட் செய்த வரையில் கணக்கிட்டு பார்த்தபோது ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில், நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை என ஒட்டுமொத்தமாக சேர்த்து லிட்டருக்கு 11.4 கிமீ மைலேஜ் கொடுத்தது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

எந்தவொரு சாலைக்கும் ஏற்ற குடும்ப காராக இருக்கிறது குவான்ட்டோ. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வகையில் நிறைந்த அம்சங்கள் மற்றும் தரத்துடன் இருக்கிறது என்று நிச்சயம் கூறலாம். 5 பேர் மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு குவான்ட்டோவை வாங்கிவிடலாம்.

முடிவு பண்ணிட்டீங்களா

முடிவு பண்ணிட்டீங்களா

குவான்ட்டோதான்னு முடிவு பண்ணிட்டீங்களா.. அப்ப இதையும் பார்த்துட்டு போனா சிறப்பா இருக்கும்.

Most Read Articles
English summary
Team Drivespark test drove the top variant Mahindraq Quanto car recently. Here is our review of the Mahindra Quanto.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X