TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
இனி புதிய பைக் வாங்கினால் 5 ஆண்டு இன்சூரன்ஸ் காட்டாயம்; கார்களுக்கு 3 ஆண்டு
செப்டம்பர் மாதம் முதல் புதிய கார்களுக்கு 3 ஆண்டு மற்றும் பைக்களுக்கு 5 ஆண்டு முன்றாம் நபர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகிறது. விபத்தில் பலியாபவர்கள் பலருக்கு இழப்பீடு கிடைப்பதில்லை என்பதால் இந்த இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த 3 மற்றும் 5 ஆண்டு இன்சூரன்ஸ் இல்லாமல் கட்டாயம் வாகனங்களை விற்பனை செய்யகூடாது எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு ஒரு வருட இன்சூரன்ஸ் கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன் பின் வாகன உரிமையாளர் ஒவ்வொரு ஆண்டும் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டம்
இந்நிலையில் உச்சநீதிமன்றம் சாலை பாதுகாப்பு குறித்து கமிட்டி ஒன்றை முன்னாள் நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்து இந்தியாவில் விபத்தை குறைப்பதற்கான வழிகளையும சட்ட திருத்தங்களை ஆராய்ய சொல்லியது. அந்த கமிட்டி சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரையின் படி ஆண்டிற்கு இந்தியாவில் லட்சகணக்கானோர் விபத்தில் பலியாகின்றனர். அதில் விபத்திற்குள்ளாகும் பல வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள ஒரு ஆண்டு இன்சூரன்ஸ் கட்டாயம் சட்டத்தினால் ஒரு ஆண்டிற்கு மட்டும் இன்சூரன்ஸ் எடுத்து அதை புதுப்பிக்காமல் தொடர்ந்து வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் விபத்தை ஏற்படுத்தினால் அதனால் காயமடைபவர்குளுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில்லை.
இதனால் புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கான மூன்றாம் நபருக்கான காப்பீட்டு காலத்தை அதிகமான காலமாக அதாவது கார்களுக்கு முன்று ஆண்டுகள், பைக்குகளுக்க 5 ஆண்டுகள் காப்பீட்டை காட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.
அதன் படி தற்போது அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும் கார் பைக்குகளுக்கு மேலே குறிப்பிட்டபடி இன்சூரன்ஸ் பெறுவது கட்டாயமாகிறது. இதை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்க மட்டுமே வாகனங்களை டீலர்கள் விற்பனை செய்ய முடியும்.
மேலும் சாலை பாதுகாப்பு கமிட்டு உச்சி நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் இந்தியாவில் மொத்தம் 18 கோடி வாகனங்கள் இயங்கி வருகிறது. அதில் 3ல் ஒரு பங்கு அதாவது 6 கோடி வாகனங்களுக்குமட்டும் மூன்றாம் நபருக்கான காப்பீடு உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு வாங்கனங்கள் இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் தான் இயங்கி வருகிறது.
உச்ச நீதிமன்றம் அமைத்த இந்த கமிட்டி மத்திய சாலை போக்குவரத்து துறை, இன்சூரன்ஸ் ஒழுங்கு மற்றம் முன்னேற்ற ஆணையம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்தாக அந்த கமிட்டி அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!
- உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்
- சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..
- புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!
- புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கும் பழைய ஜாஸ் காருக்கு என்ன வித்தியாசம் தெரியுமா?