புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

ஸ்டீயரிங் சிஸ்டத்தை பரிசோதிக்கும் விதத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.

By Saravana Rajan

ஸ்டீயரிங் சிஸ்டத்தை பரிசோதிக்கும் விதத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

வடிவமைப்பு, வசதிகள், கட்டுமானம் என அனைத்திலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் கடந்த மே மாதம் 16ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே முன்பதிவிலும், விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

இந்த நிலையில், புதிய ஹோண்டா அமேஸ் காரின் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீயரிங் வீல் திருப்புவதற்கு கடினமாக இருப்பது போன்ற உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், சென்சார் பிரச்னை காரணமாக, ஸ்டீயரிங் சிஸ்டத்தின் எச்சரிக்கை விளக்கும் எரிவதாக சில வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 17 முதல் மே 24ந் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

பிரச்னை இருப்பதாக கருதப்படும் கார் உரிமையாளர்களுக்கு வரும் 26ந் தேதி முதல் டீலர்கள் வழியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தமாக 7,290 புதிய ஹோண்டா அமேஸ் கார்களை பரிசோதிப்பதற்காக திரும்ப அழைக்க இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

ஒருவேளை, பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஸ்டீயரிங் காலம்ன் யூனிட்டை முழுவதுமாக மாற்றித் தருவதற்கும் ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு கட்டணம் ஏதுமில்லா சேவையாகவும் வழங்கப்படும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

வாடிக்கையாளர்களின் நலன் கருதி இப்பிரச்னையை பரிசோதித்து தருவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் 31ந் தேதி வரை ரூ.5.59 லட்சம் என்ற சிறப்பு ஆரம்ப விலையில் ஹோண்டா அமேஸ் கார் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 21, 2018, 10:32 [IST]
English summary
Honda has recalled the new Amaze in India over power steering issue. The new Honda Amaze was launched in the Indian market in May 2018 with a starting price of 5.59 lakh ex-showroom (Delhi). Now, within three months the manufacturer has issued a recall for the compact sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+