சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

நவீன கால கார்களில் பல புதுமையான வசதிகள் அறிமுகமாகி கொண்டே வருகின்றன. ஆரம்பத்தில் விலை உயர்ந்த லக்ஸரி கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த புதுமையான வசதிகள், தற்போது சாதாரண கார்களிலும் வழங்கப்படுகின்றன.

By Arun

நவீன கால கார்களில் பல புதுமையான மற்றும் புத்திசாலித்தனமான வசதிகள் அறிமுகமாகி கொண்டே வருகின்றன. ஆரம்பத்தில் விலை உயர்ந்த லக்ஸரி கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த புதுமையான வசதிகள், தற்போது சாதாரண கார்களிலும் இடம்பெற தொடங்கி விட்டது. அப்படிப்பட்ட வசதிகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

ஃபிட்னெஸ் பேண்ட் (Fitness band)

ஹூண்டாய் கிரெட்டா காரின் SX(O) வேரியண்ட், பிட்னெஸ் பேண்ட் உடன் வருகிறது. நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பதை கணக்கிடும் ஸ்டெப் கவுன்டர், கலோரி கவுன்டர் உள்ளிட்டவற்றை இது உள்ளடக்கியுள்ளது. சாவி இல்லாமல் காரை ஸ்டார்ட் மற்றும் ஓபன் செய்யவும் இந்த பேண்ட் உதவுகிறது.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

பிட்னெஸ் பேண்ட்டை கையில் கட்டிக்கொள்ளலாம். இதன் பாப்புலாரிட்டி இன்று ஏகத்துக்கும் எகிறி வருகிறது. இதன் காரணமாக ஹூண்டாய் கிரெட்டா கார் உரிமையாளர்கள் பலரின் கைகளில் தற்போது பிட்னெஸ் பேண்ட்டை காண முடிகிறது.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

கர்வ் கைடன்ஸ் (Curve guidance)

சில ஹூண்டாய் கார்களில் (வெர்னா, கிரெட்டா உள்பட) கர்வ் கைடன்ஸ் வசதி வழங்கப்பட்டு வருகிறது. பயணித்து கொண்டிருக்கும் சாலையில், ஏதேனும் ஒரு கர்வ் (வளைவு) வந்தால், டிரைவருக்கு கேட்கும் வகையில், எச்சரிக்கை செய்யும் வசதிதான் கர்வ் கைடன்ஸ்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

அறிமுகம் இல்லாத சாலைகளில் பயணிக்கும்போதும், கண்ணுக்கு பாதை சரியாக தெரியாத சமயங்களிலும், கர்வ் கைடன்ஸ் வசதி மிகவும் உதவியாக இருக்கும். ஆன்போர்டு நேவிகேஷனை பயன்படுத்தாதபோதும் கூட, கர்வ் கைடன்ஸ் வசதி வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

வாக் அவே லாக் (Walk away lock)

ரெனால்ட் கேப்சர் கார், வாக் அவே லாக் வசதியுடன் வருகிறது. உங்கள் பாக்கெட்டில் சாவியை வைத்து கொண்டு, காரில் இருந்து நீங்கள் குறிப்பிட்ட தொலைவு நடந்து சென்றால், கார் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும். காரை லாக் செய்ய அடிக்கடி மறந்து விடுபவர்களுக்கு இந்த வசதி பேருதவி செய்யும்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

எமர்ஜென்ஸி அஸிஸ்ட் சிஸ்டம் (Emergency Assist System)

கார் விபத்தில் சிக்கி கொள்ள நேரிட்டால், போர்டு நிறுவனத்தின் எமர்ஜென்ஸி அஸிஸ்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக்காக 108க்கு போன் செய்து விடும். SYNC உடன் உங்கள் போன் கனெக்ட் செய்யப்பட்டிருந்தால் இந்த வசதி வேலை செய்யும்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

ஸ்மார்ட் டிரங்க் (Smart Trunk)

ஹூண்டாய் வெர்னா, எலான்ட்ரா உள்ளிட்ட கார்களில் ஸ்மார்ட் டிரங்க் வசதி வழங்கப்பட்டு வருகிறது. சாவியை கையில் எடுக்காமல், காரின் டிக்கியை திறக்க இந்த வசதி உதவி செய்கிறது. 2 கைகளிலும் ஏதேனும் ஒரு பொருளை வைத்து கொண்டிருக்கும்போது, அனாவசியமாக சாவியை தேட தேவையில்லை.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

சாவியை பாக்கெட்டில் வைத்து கொண்டு டிக்கிக்கு அருகே செல்ல வேண்டும். டிக்கியில் இருந்து 1 மீட்டருக்கு குறைவான தொலைவில், 3 வினாடிகளுக்கு மேல் நீங்கள் நின்று கொண்டிருந்தால், டிக்கி ஆட்டோமெட்டிக்காக திறந்து விடும். ஆனால் அதற்கு சாவி உங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

மேக்ஸ் கூல் (Max cool)

ஹோண்டா அமேஸ் காரில், மேக்ஸ் கூல் பட்டன் இடம்பெற்றுள்ளது. ஏர் கண்டிஷனரை முடிந்த வரை முழு வேகத்தில் இயக்கி, மிக மிரைவாக கேபினை கூல் செய்ய மேக்ஸ் கூல் பட்டன் உதவுகிறது. சாதாரணமாக வெளியில் நிலவும் வெப்ப நிலையை விட காரின் உள்ளே அதிக வெப்ப நிலை நிலவும்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

எனவே மேக்ஸ் கூல் வசதி மிகவும் உதவிகரமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு உள்ளே செல்பவர்களுக்கு மேக்ஸ் கூல் வசதி வரப்பிரசாதம் போன்றது.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

ஆட்டோமெட்டிக்காக ஆப் ஆகும் கேபின் லைட்

சில சமயங்களில் நாம் காரை பார்க் செய்து விட்டு, கேபின் லைட்டை அணைக்காமல் சென்று விடுவோம். அப்படி செய்தால், சில சமயங்களில் பேட்டரி மிகவும் டவுன் ஆகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் ஹூண்டாய் வெர்னா காரை வாங்கினால், இது உங்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காது.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

ஏனெனில் நீங்கள் காரை லாக் செய்து விட்டால், கேபின் விளக்குகளை வெர்னா ஆட்டோமெட்டிக்காக ஆப் செய்து விடும். நீங்கள் கேபின் லைட்டை சுவிட்ச் ஆப் செய்ய மறந்து விட்டாலும் கூட பிரச்னையில்லை. இதன்மூலமாக பேட்டரி சேமிக்கப்படும்.

சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..

இன்டிகேட்டராக மாறும் ஸ்டாப் லைட்

காரில் உள்ள முக்கியமான பாகங்களில் ஒன்று இன்டிகேட்டர்கள். ஆனால் ரியர் இன்டிகேட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், ஃபியட் புன்டோ காரின் டெயில் லைட்டுகள் ஆட்டோமெட்டிக்காக இன்டிகேட்டர்களாக செயல்பட தொடங்கி விடும்.

Source: Team-BHP

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. உங்கள் கார் 45 கி.மீ மைலேஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்
  2. கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW
  3. புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன!

More from DriveSpark

Article Published On: Saturday, July 21, 2018, 11:38 [IST]
English summary
Modern Features of Cars. Read in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+