புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கும் பழைய ஜாஸ் காருக்கு என்ன வித்தியாசம் தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஜாஸ் காரின் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை உருவாக்கியது. பழைய மாடல் காரிலும் இந்த மாடல் காரிலும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. காரின் வெளிப்புறம், உட்புறம், காரில் உள்ள வசதிகள

By Balasubramanian

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஜாஸ் காரின் ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை உருவாக்கியது. பழைய மாடல் காரிலும் இந்த மாடல் காரிலும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. காரின் வெளிப்புறம், உட்புறம், காரில் உள்ள வசதிகள், அம்சங்கள் என சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில் நாம் இந்த இரண்டு காருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி பார்ப்போம்.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

வெளிப்புறம்

பழைய மாடல் ஜாஸ் காரை காட்டிலும், 2018 ஜாஸ் காரின் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிபுறத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. கார் டோரில் உள்ள ஹேண்டில்களில் க்ரோம் கலர், எல்இடி டெயில் லேம்ப், ரெட் மெட்டாலிக் மற்றும் லுனார் சில்வர் மெட்டாலிக், ஆகிய இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் ஆகிய புதிய காரில் மாற்றங்களாக உள்ள மற்றப்படி வெளிப்புறத்தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்பவில்லை.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

உட்புறம்

உட்புறத்தை பொருத்தவரை டிசைன் மற்றும் கேபின் லேஅவுட்களில் பழைய மாடல் காரில் இருந்து புதிய மாடல் காருக்கு பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. உட்புறம் பேட்ஜ் அல்லது கருப்பு நிற டிசைனை ஆப்ஷனாக பெரும் வசதி இருக்கிறது. காரின் இன்போடெயின்மென்டை பொருத்தவரை ஹோண்டா டிஜிபேட் 2.0 அப்டேட்டை பெற்றுள்ளது. மேலும் ஸ்டியரிங் வீலில் க்ரூஸ் கண்ட்ரோல் பட்டன், பொருத்தப்பட்டுள்ளது. இது ஹோண்டா சிட்டி காரில் உள்ளது போல உள்ளது.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

அம்சங்கள்

புதிய ஹோண்டா ஜாஸ் காரை பொருத்தவரை அதன் அம்சங்களில் பழைய காரில் உள்ளதை விட பல புதிய அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல பழைய காரில் இருந்த சில அம்சங்களும் நீக்கப்பட்டுள்ளன. புதிய காரில் அப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆகிய அம்சங்கள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

மேலும் புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன், ஹோண்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம், கீலெஸ் ரிமோட், மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியன புதிய அம்சங்களாக உள்ளன. மேலும் சிறப்பு அம்சங்களாக சென்ட்ரல் லாக்கிங், முன்பக்க சென்டர் ஆர்ரெஸ்ட் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

வேரியன்ட்ஸ் மற்றும் பவர்டிரைன்

பழைய ஜாஸ் காருக்கும் புதிய ஜாஸ் காருக்கும் வேரியன்ட்களி்ல் சில வித்தியாசங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஜாஸ் கார் -எஸ், வி, மற்றும் விஎஸ்க் ஆகிய வேரியன்ட்களில் மட்டும் கிடைக்கிறது. இ மற்றும் எஸ்வி வேரியன்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

மேலும் எஸ் வேரியன்டும் டீசல் வெர்ஷனில் மட்டும் தான் கிடைக்கிறது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இன்ஜினை பொருத்தவரை 89 பிஎச்பி பவரை தரும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 99 பிஎச்பி பவரை தரும் 1.5 லிட்டர் டீசல இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

பெட்ரோல் கார்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், மற்றும் சிவிடி ஆப்ஷன்களில் வருகிறது. டீசல் வேர்யன்ட் கார்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அப்ஷனுடன் வருகிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

விமர்சனம்

புதிய ஹோண்டா ஜாஸ் காரை பொருத்தவரை சில அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ரூ7.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இந்த காருடன் நேரடியாக போட்டிபோடும் பெலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களின் விலையை விட ரூ 2 லட்சம் அதிகமாக உள்ளது. அனால் பழைய மாடலை விட பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

புதிய ஹோண்டா ஜாஸ் வித்தியாசம்

இதுவரை பெலேனோ காரில் அப்டேட்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஐ20 காரில் பேஸ்லிப்ட் வெர்ஷன் வெளியானது. விலை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு ஹோண்டா நிறுவனம் வெளிப்புறத்தோற்றத்தில் சில மாற்றங்களை செய்திருக்கலாம். க்ரில் அப்டேட், சாலிட் விங் ஃபேஸ் ஆகிய மாற்றங்களை செய்திருக்கலாம்.

Most Read Articles
English summary
2018 Honda Jazz vs Old Honda Jazz: Spot The Difference. Read in Tamil
Story first published: Friday, July 20, 2018, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X