காற்றின் அழுத்தத்தை தானாக சரிசெய்து கொள்ளும் டயர்!

Tyre
காற்றின் அழுத்தத்தை தானாகவே சரிசெய்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகன டயரை குட்இயர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் குட்இயர் நிறுவனம் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்த நிலையில், குட்இயர் நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிரிவு இந்த ஆண்டு துவக்கத்தில் காற்றின் அழுத்தத்தை தானாகவே சரிசெய்து கொள்ளும் புதுமையான டயர் ஒன்றை வடிவமைத்து வருவதாக அறிவித்தது.

தற்போது வடிவைமப்பு பணிகள் முழுமை பெற்று சோதனை கட்டங்களை இந்த டயர் எட்டியிருக்கிறது. சோதனைகளில் இந்த புதிய டயர் சிறப்பாக செயல்படுவதாக குட்இயர் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து குட்இயர் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் தகவல்தொடர்பு மேலாளர் ஜேம்ஸ் கூறுகையில்," டயருக்குள் சிறிய வால்வு பொருத்தப்பட்டிருக்கிறது.

ஒருவேளை, டயரில் காற்று குறைந்தால் வாகனம் சென்றுகொண்டிருக்கும்போது தானாகவே வெளியிலிருந்து காற்றை உறிஞ்சி டயரில் போதுமான காற்றை இந்த வால்வு நிலைப்படுத்தும். இதேபோன்று, காற்று அதிகமானாலும் தானாகவே இந்த வால்வு வெளியேற்றிவிடும்.

டயரில் காற்றின் அளவு எப்போதும் சீராக இருக்கும் என்பதால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும்," என்றார்.

இந்த புதிய டயர் அடுத்த ஆண்டு வட அமெரிக்காவில் சாலை சோதனைகள் நடத்தப்பட இருப்பதாக குட்இயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Leading tyre maker Goodyear has unveiled a new type of tyre that inflates itself while on the move. The company claims the tyre will save drivers money due to more even wear and better fuel economy.
Story first published: Monday, October 29, 2012, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X