மிக சவாலான விலையில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்து போட்டியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. தோற்றத்திலும் புதுப்பொலிவு பெற்றிருப்பதால் இந்த வட்டாரத்தின் ஆணழகன் வெர்னாவுக்கு தொடை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்முறையாக டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த புதிய சிட்டி கார் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் செல்லும் என்பது மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது. அதிக இடவசதி கொண்ட மிட் சைஸ் செடான் என்பதும் இதன் கூடுதல் அம்சம்.
அனைத்திலும் பல சிறப்பம்சங்களை பரைசாற்றி வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா சிட்டி காருடன் 7 செடான் கார் மாடல்களை பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
புதிய ஹோண்டா சிட்டி
4ம் தலைமுறை காராக மாறியிருக்கும் புதிய ஹோண்டா சிட்டி ரூ.7.42 லட்சம் முதல் ரூ.11.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த காரை ரசிக்கவும், வசதிகள், தொழில்நுட்ப விபரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.
மாருதி சுஸுகி எஸ்எக்ஸ்4
மார்க்கெட்டில் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த கார் மாடலாக மாருதி எஸ்எக்ஸ்4 இருந்து வருகிறது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மிட்சைஸ் செடான் இது. பெட்ரோல் மற்றும் டீசலில் கிடைக்கிறது.
ரூ.7.32 லட்சம் முதல் ரூ.9.85 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காரை பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து உள்ளே வாருங்கள்.
ஹூண்டாய் வெர்னா
மிட்சைஸ் மார்க்கெட்டின் தற்போதைய ஆணழகன் வெர்னாதான். சிறந்த டிசைன் கொண்ட இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது.
ரூ.7.40 லட்சம் முதல் ரூ.11.69 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த காரை பற்றிய முழுமையான விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஃபோர்டு ஃபியஸ்ட்டா
மிட்சைஸ் மார்க்கெட்டின் மிக ஸ்டைலான செடான் மாடல்களில் ஒன்று ஃபியஸ்ட்டா. ஏராளமான சிறப்பம்சங்கள், வசதிகளை கொண்ட இந்த காரும் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது.
ரூ.7.47 லட்சம் முதல் ரூ.10.32 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் முழு விபரத்தையும் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஃபியட் லீனியா
பணத்திற்கு மதிப்புடைய மிட்சைஸ் கார்களில் லீனியாவும் ஒன்று. இடவசதி, சொகுசான பயணம், சிறந்த எஞ்சின் என பல வகைகளிலும் லீனியாவுக்கு சாதகங்கள் அதிகம்.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ரூ.7.18 லட்சம் முதல் ரூ.9.61 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. முழு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ
மிட்சைஸ் மார்க்கெட்டில் பிரிமியம் ரகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மாடல் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ. ஜெர்மன் தொழில்நுட்பத்திற்கு சான்றாக விளங்கும் இந்த காரும் பெட்ரோல், டீசல் மாடலில் கிடைக்கிறது.
ரூ.7.38 லட்சம் முதல் ரூ.10.05 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் இந்த காரின் முழு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஸ்கோடா ரேபிட்
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோவின் ரீபேட்ஜ் மாடலான ஸ்கோடா ரேபிட் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக புகழப்பெறுகிறது.
ரூ.6.93 லட்சம் முதல் ரூ.9.78 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் கிடைக்கும் இந்த காரின் முழுமையான விபரங்களை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
நிசான் சன்னி
மிட்சைஸ் மார்க்கெட்டில் நிறைவான இடவசதி கொண்ட கார் சன்னி. விலை, இடவசதி, சிறந்த எஞ்சின் ஆப்ஷன்கள் என அனைத்திலும் சிறப்பான கார் மாடலாக திகழ்கிறது.
ரூ.6.30 லட்சம் முதல் ரூ.9.87 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரைப் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications